இன்றைய ராசி பலன்கள் ஆகஸ்ட் -18/2026-செவ்வாய்க்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

கர்ம வினையின் சூட்சுமமும், மர்மம் நிறைந்த கருணையும்  click here 

இன்றைய ராசி பலன்கள் -ஆகஸ்ட்    -18/2026- செவ்வாய்க்கிழமை  

1,மேஷம் 
உங்கள் எதிர்காலத்தை நினைவில் கொண்டு இன்று நீங்கள் ஆற்றும் ஒரு செயலானது நீங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும் அதன் பொருட்டு உங்கள் மனம் ஆனந்தம்  பெறும்  நன்நாள் இந்நாள் 

2, ரிஷபம் 
கடந்த காலங்களில் நடந்ததொரு கசப்பான அனுபவத்தின் விளைவாக இன்று நீங்கள் சில சங்கடங்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து தேவையில்லாத சிந்தனைகளை தவிர்த்து ஆன்மீக சிந்தனைகளை அதிகப்படுத்தினால் உங்கள் மனம் அமைதி  பெறும்   நன்நாள் இந்நாள்

3, மிதுனம்
யாருக்கும் தெரியாமல் ஆழ்மனதில் நீங்கள் ஒளித்து வைத்திருக்கும் உங்களது கவலைகள் அனைத்தும் உங்களது குலதெய்வத்தின் அருளாலும் உங்களது முயற்சியாலும் விலகும் நாள் அதன் பொருட்டு உங்கள் மனம் நிம்மதி   பெறும்  நன்நாள் இந்நாள்

4, கடகம்
உங்களது பொறுமையை சோதிக்கும் வண்ணம் சில செயல்கள் நடக்கும் இருப்பினும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பொறுமையாக இருந்தால் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியும் லாபமும் கிடைக்கும் அதன் பொருட்டு மகிழ்ச்சி   பெறும் நன்நாள் இந்நாள்
 

5, சிம்மம்
உங்களது கடுமையான முயற்சியாலும் இறைவனின் அருளாலும் இன்று உங்களுக்கு நீண்ட நாள்  எதிர்பார்த்தது ஒரு பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது அதன் பொருட்டு மனநிறைவு    பெறும் நன்நாள் இந்நாள்

6, கன்னி
ஆரம்பத்தில் உங்களது முயற்சிகள் சற்று தோற்பது போல் தெரியலாம் மதியத்திற்குப் பின் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடக்கும் அதன் பொருட்டு மகிழ்ச்சி பெறும் நன்நாள்  இந்நாள் 

7, துலாம்
உங்கள் மீது நம்பிக்கை வைத்தவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக சில சவால்களை சந்திக்க நேரிடும் இருப்பினும் இறைவனின் அருளாலும் உங்கள் முயற்சியாலும் அனைவரின் நம்பிக்கைக்கு உரியவர்களாக ஜொலிப்பீர்கள் பாராட்டு  பெறும் நன்நாள் இந்நாள்
 

8, விருச்சிகம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை தலைவலி சளி சம்பந்தப்பட்ட உபாதைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து குளிர்ந்த உணவுகளை தவிர்த்து நல்ல ஆரோக்கியம் மிகுந்த உணவுகளை உட்கொண்டால்  நலம்  பெறும் நன்நாள் இந்நாள்  

9, தனுசு 
இன்று நீங்கள் ஆற்றும் ஒரு செயலானது இதுவரை நீங்கள் காணாததொரு அனுபவத்தையும் மனதைரியத்தையும் தரும் அதன் பொருட்டு தன்னம்பிக்கை பெறும்  நன்நாள் இந்நாள் 

10, மகரம்
சில மன குழப்பங்களால் மன வருத்தம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து தேவையில்லாத சிந்தனைகளையும் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களையும் தவிர்த்தால் நல்லதொரு மேன்மை மிகு அனுபவம்  பெறும்  நன்நாள் இந்நாள் 

11, கும்பம் 
இதுவரை நீங்கள் சந்திக்காததொரு அனுபவத்தை இன்று சந்திக்க வாய்ப்பு உள்ளது அதன் விளைவாக ஞானம்  பெறும் நன்நாள் இந்நாள்

 12, மீனம் 
உங்கள் ஆழ்மனதில் இனம் புரியாதொரு  சோகம் ஏற்பட வாய்ப்புள்ளது உங்கள் மனதை உறுதி செய்ய குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு தியானம் போன்ற யோகப் பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது நலம் பெறும்  நன்நாள் இந்நாள்

ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : 
ரேவதி  
 
பரிகாரம் :
அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் ஆதரவின்றி தவிக்கும் நோயாளிகளுக்கு அவர்களுக்குத் தேவையான மற்றும் உங்களால் இயன்ற பொருள் உதவிகளை  செய்வது 
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும் 

இன்றைய சுப நட்சத்திரம் : சுவாதி   

சுவாதி
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகிலுள்ள பழமையான அம்மன் கோவிலுக்கு சென்று மஞ்சள் குங்குமத்தை பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்குமாறு கோவில் பூசாரியிடம் வேண்டுகோள் வைத்து  மஞ்சள் குங்குமம் கோவிலுக்கு தந்து  அம்மனுக்கு அர்ச்சனை செய்து இரண்டு நெய் தீபம் ஏற்றி மனம் உருகி வழிபடுவது  இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...


ஆதிசிவம்  பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here 


ஆதி சிவம் பவுண்டேஷன் நடத்தும் ஆதிசிவ யோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள்
மேலும் படிக்க click here 

தினராசி பலன் பற்றிய விளக்கம் 
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here 

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here 


உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 

அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more


உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார் 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ