தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம்

அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை சமேத திருவாப்புடையார் திருக்கோவில்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாகும்.

அப்பாவின் 
சிறப்பு பெயர்கள்:  ஆப்புடையார், அன்னவிநோதர், விடபேஸ்வரர், ஆப்பனூர் நாதர், இடபுரேசர் (ரிஷபுரேசர்)
அன்னையின் 
சிறப்பு பெயர்கள் :  குரவங்கமழ் குழலம்மை, சுகந்த குந்தளாம்பிகை

தல விருட்சம் : வன்னி, கொன்றை
தீர்த்தம் வைகை, இடபதீர்த்தம்
புராண பெயர் திருவாப்பனூர், திருஆப்புடையார் கோவில்.
திருத்தலத்தின் அமைப்பு விவரம் 
அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை சமேத திருவாப்புடையார் கோவில்
ஆப்புடையார் கோவில் அமைப்பு
இவ்வாலயத்திற்கு கோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் ரிசபாரூடராக சிவன், பார்வதி, முருகர் மற்றும் விநாயகர் சுதை வடிவில் காணப்படுகின்றனர். வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் காணப்படும் மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தியைக் காணலாம். இறைவன் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதிக்கும், சுவாமி சந்திக்கும் இடையில் சுப்பிரமணியருக்கு சந்நிதி உள்ளது. இத்தகைய அமைப்பை சோமஸ்கந்த அமைப்பு என்பர். பிரகாரம் சுற்றி வரும்போது தலவிருடசம் வன்னி மரத்தடியில் விநாயகர் தரிசனம் தருகிறார். வள்ளி தெய்வானை அருகிலிருக்க முருகர் மயில் அமர்ந்து காட்சி தருகிறார்.
இத்தலத்தில் கல் சிற்பமாக நடராஜர், சிவகாமி, அருகில் மத்தளம் வாசிக்கும் நிலையில் நந்திதேவர் ஆகியோர் தனி சந்நிதியில் காட்சி கொடுக்கின்றனர். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இந்த சிலாவுருவங்கள் இத்தலத்தின் சிறப்பம்சம். உற்சவர் நடராஜரும் சிவகாமியுடன் உள்ளார். மண்டபத்தில் உள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.

வறுமையை நீக்கி குபேர வாழ்வு தரும் திருவாப்பனூர் திருக்கோவில் வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் 
பெரும்பாலான மனிதர்கள் கடன் பிடியிலும், வறுமையின் பிடியிலும் சிக்கித் தவிக்கிறார்கள்.அதற்குக் காரணம் சஞ்சீத கர்மா வினையின் அழுத்தமே ஆகும்.நமது ஜாதகத்தில் ஆறாம் பாவத்தை பொருத்தும் கணக்கிடலாம்.பொதுவாக அனைத்து படைப்பிற்கு பின்னாலும் ஒரு நோக்கம் நிச்சயமாக இருக்கும் என்பது நாம் உணர்ந்தவையே.திரு ஆப்பனூர் திருத்தலம் உருவானதன் நோக்கம் ஏழ்மை நிலையில் தவிக்கும் மனிதர்களை அவர்களது கர்மவினைகளில் இருந்து மீட்டெடுத்து அவர்களுக்கு தேவையான பொருளாதார உயர்வைத் தந்து நம்மை காப்பதே திருத்தலத்தின் சிறப்பு அம்சமாகும்.
எப்படி வழிபடுவது என்பது பற்றிய விளக்கம்.
144,நாட்களுக்கு தொடர்ந்து தினமும் காலை சூரிய உதயத்திலிருந்து முதல் மூன்று மணி நேரத்திற்குள் அப்பாவையும் அன்னையையும் நந்தீஸ்வரரையும் தரிசிப்பது மற்றும் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் மனம் உருகி வழிபடுவது (உங்களால் இயன்றால் அப்பாவுக்கும் நந்தீஸ்வரருக்கும் வில்வ அர்ச்சனை செய்வது அம்மாவுக்கு தாமரை அர்ச்சனை செய்து  மற்றும் குங்குமம் வாங்கித் தருவது) மேலும் பூரண சரணாகதி நிலையில் இருந்து முழு நம்பிக்கையுடன் மனம் உருகி வழிபட்டால் கடன்களின் பிடியிலிருந்தும், வறுமையின் பிடியிலிருந்தும் உங்களை மீட்டு உங்களது பொருளாதார நிலையை பன்மடங்கு உயர்த்தி உங்கள் வாழ்வை வளமாக்கும்.
எளிமையான முறையில் எப்படி வழிபடுவது என்பது பற்றிய விளக்கம்.
ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலை எட்டு மணியிலிருந்து ஒன்பது  மணிக்குள் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் தரிசித்து அம்மாவையும் அப்பாவையும் நந்தீஸ்வரரையும் தரிசித்து உங்களால் இயன்றால் வில்வம் தாமரை குங்குமம் வாங்கித் தந்து அர்ச்சனை செய்து மனம் உருகி வழிபடுவது.மற்றும் அங்குள்ள 
அர்ச்சகர்கள்,(பூசாரிகளுக்கு) கோவிலில் உள்ள உழவாரப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, அவர்களுக்குத் தேவையான மற்றும் உங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்வது.மற்றும் அனைத்து பிரதோஷங்களிலும் உங்களால் இயன்றால் பிரதோஷ விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்வது.கடனின் பிடியிலிருந்தும் ,வறுமையின் பிடியில் இருந்தும் உங்களை மீட்டு பொருளாதார நிலையை  பன்மடங்கு உயர்த்தி உங்கள் வாழ்வை வளமாக்கும்.
குறிப்பு : 
பூரண சரணாகதி நிலையில் இருந்து முழு நம்பிக்கையுடன் இந்தப் பரிகாரங்களை மேற்கொண்டால் நிச்சயம் உங்கள் வாழ்வில் பொருளாதார நிலை உயரும்.

மேலும் தனி சிறப்பு :
திருவாப்புடையார் திருத்தலம் நீர் ஸ்தலம் என்பதால் இங்கு முன்னோர்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம், திதி முழுமையாக முன்னோர்களைச் சென்றடைந்து பித்ரு சாபத்தை நீக்கி உங்களது வாழ்வில் வரும் அனைத்து தடைகளையும் தகர்த்து நீங்கள் முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்புகளை உங்களுக்குத் தந்து உங்கள் வாழ்வை வளமாக்கும்.

திருத்தலத்திற்கு செல்லும் வழி விபரம்.GOOGLE MAP Click here...
இந்த சிவஸ்தலம் கோவில் மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 17, 17A, 17C பேருந்துகளில் ஏறி திருவாப்புடையார் கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால் கோவில் மிக அருகில் உள்ளது. மதுரை நகரின் ஒரு பகுதியான சிம்மக்கல் என்ற இடத்தில் இருந்து வைகை ஆற்றைக் கடந்து சென்றும் இக்கோவிலை எளிதில் அடையலாம்.

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில் இணையவும் ...click here ...

Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...

இறைவனின் அருளாலும் இறைவன் அருளிய ஞானத்தாலும் அடியேன் உணர்ந்து கூறியதே இந்தப் பரிகாரமாகும்.
சர்வமும் சிவர்பணம் ஓம் நமசிவாய சிவ சிவ அடியார்க்கு  அடியேன் ஆனந்த குரு அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன் 
            வாழ்வோம் வளமுடன்