ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
வளமான வாழ்வை தரும் குரு பெயர்ச்சி பலன்கள் click here...
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது...
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
இன்றைய ராசி பலன்கள் -ஆகஸ்ட் -26/2024- திங்கள் கிழமை
1,மேஷம்
என்றோ ஒரு நாள் நீங்கள் செய்த ஒரு நன்மையும் விளைவாக இன்று உங்களது பொருளாதார நிலை உயரம் மதன் பொருட்டு நல்லதொரு மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
2,ரிஷபம்
ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும் அதன் விளைவாக இதுவரை நீங்கள் உணராததொரு உணர்வினை பெற்று உங்கள் மனம் அமைதி பெறும் நன்நாள் இந்நாள்
3,மிதுனம்
உங்களுக்குத் தேவையான சில ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள் இருப்பினும் அந்தப் பொருள் நமக்கு அவசியம் தேவையா என்று யோசித்து செலவு செய்தால் நல்லதொரு மன நிறைவு நிறைந்த மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
4,கடகம்
உங்களது திறமை என்னவென்று இவ்வுலகிற்கு அரிய செய்யும் அரிய வாய்ப்பு கிடைக்கும். அதன் விளைவாக உங்களைச் சார்ந்த அனைவரிடம் நல்லதொரு பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்
5,சிம்மம்
உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான சில நல்ல வாய்ப்புகளை பெறுவதற்கான Qவாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து அனைத்து வாய்ப்புகளையும் நல்ல முறையில் பயன்படுத்தினால் நல்லதொரு லாபத்தையும் வெற்றியும் பெறும்
6,கன்னி
முன்பின் தெரியாதவர்களும் இன்று உங்களை புகழும் அளவிற்கு அற்புதமான சில நல்ல செயல்களை நீங்கள் செய்ய வாய்ப்புள்ளது அதன் பொருட்டு நல்லதொரு பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்
7,துலாம்
கடந்த சில நாட்களாகவே உங்களுக்குள் இருந்த ஒரு மன அழுத்தம் இறைவன் அருளாலும் நீங்கள் செய்த புண்ணியத்தின் பலனாலும் இன்று விலகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது அதன் பொருட்டு நல்லதொரு மன நிறைவை பெறும் நன்நாள் இந்நாள்
8,விருச்சிகம்
உங்களது புத்தி கூர்மையால் இன்று நீங்கள் செய்யும் ஒரு செயலானது இன்று உங்களைச் சார்ந்தவர்களையும் உங்களையும் நல்லதொரு மகிழ்ச்சி பெறசெய்யும் நன்நாள் இந்நாள்
9,தனுசு
உங்களைச் சார்ந்தவர்களுக்கு மத்தியில் மரியாதைக்குரிய நபராக இன்று நீங்கள் ஜொலிக்க வாய்ப்பு உள்ளது அதன் விளைவாக நல்லதொரு பெருமை நிறைந்த பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்
10,மகரம்
உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை முழங்கால் மற்றும் மூட்டுகளில் வலி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை உணர்ந்து கடுமையான வேலைகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகள் உட்கொண்டு ஓய்வெடுத்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
11,கும்பம்
இனம் புரியாததொரு மன வருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து உங்களது மன தைரியத்தை அதிகப்படுத்தினால் நல்லதொரு நிம்மதி பெறும் நன்நாள் இந்நாள்
12,மீனம்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results benefits regularly...
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் :
உத்திரம்,அஸ்தம்
பரிகாரம்:துறவிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தானம் தருவது மேலும் அவர்களுக்கு தேவையான உங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்வது அவர்களது நிலை அறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வது
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள அருகிலுள்ள அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று உங்களால் இயன்றால் ஏழு தோப்புக்கரணம் போட்டு அருகம்புல் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்து மனம் உருகி வழிபடுவது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .
2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.
3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.
இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள் இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும் மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ...
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம்
ஓம் நமசிவாய சிவ சிவ
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ