இன்றைய ராசி பலன்கள் நவம்பர் -8/2024-வெள்ளிக்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 

வளமான வாழ்வை தரும் குரு பெயர்ச்சி பலன்கள் click here...

தினராசி பலன் பற்றிய விளக்கம் 

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது... 

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...

Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...

இன்றைய ராசி பலன்கள் -நவம்பர்  -/2024- வெள்ளிக்கிழமை 

1,மேஷம் 
சற்று உடல் சோர்வும் மனச்சோர்வும் இருக்க வாய்ப்புள்ளது எளிமையாக செரிமானம் ஆகும் உணவுகளை உட்கொண்டு ஓய்வெடுத்தால் நலம்  பெறும் நன்நாள் இந்நாள்  

2,ரிஷபம் 
உங்கள் குடும்பத்தினர் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை தேவை உங்கள் குடும்பத்தினர் வழக்கத்திற்கு மேலாக இன்று உங்கள் மீது அன்பு காட்டுவார்கள் அதன் பொருட்டு நல்லதொரு மனநிறைவை  பெறும் நன்நாள் இந்நாள் 

3,மிதுனம் 
முன்பின் தெரியாத ஒரு நபரால் சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத லாபமும் நல்லதொரு ஆதாயத்தையும்  பெறும் நன்நாள் இந்நாள் 


4,கடகம் 
கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை தேவையில்லாத மனக்குலப்பமும் மன வருத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து மிகுந்த விழிப்புணர்வுடன் நீங்கள் இருந்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்

5,சிம்மம் 
உங்களை அறியாமல் என்றோ ஒரு நாள் நீங்கள் செய்த ஒரு தவறின் விளைவாக இன்று உங்களது மனம் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளது இருப்பினும் நீங்கள் செய்த புண்ணியத்தின் பலனாக ஆன்மீக சிந்தனை அதிகரித்து உங்கள் மனம் அமைதி பெறும் நன்நாள் இந்நாள் 

6,கன்னி 
இன்று நீங்கள் மகிழ்ச்சி நிறைந்த ஒரு சூழலில் இருக்க வாய்ப்புள்ளது என்பதால் நல்ல மனநிறைவையும் மகிழ்ச்சியையும் பெரும்  நன்நாள் இந்நாள்

7,துலாம் 
இனம் புரியாத மன நிம்மதியும் மனநிறைவையும் இன்று நீங்கள் உணர்வீர்கள் அதன் பொருட்டு மேன்மை நிறைந்ததொரு அனுபவம்  பெறும்  நன்நாள் இந்நாள்

8,விருச்சிகம் 
இதுவரை உங்களுக்கே தெரியாத உங்களது திறமை இன்று வெளிப்படும் அதன் விளைவாக அனைவராலும் பாராட்டு பெறும்  நன்நாள் இந்நாள்

9,தனுசு 
என்றோ ஒருநாள் நீங்கள் செய்த உதவியினால் பலனடைந்த ஒருவரால் இன்று உங்களுக்கு சில நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது  புரிதல்கள் நிறைந்த அனுபவம்  பெறும்  நன்நாள் இந்நாள் 

10,மகரம் 
முன்பின் தெரியாத ஒரு நபரால் இன்று சில இழப்புகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது எனவே சற்று எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருப்பது உங்களுக்கு வரவிருக்கும் இழப்புகளிலிருந்து உங்களை காக்கும் நலம் பெறும் நன்நாள் இந்நாள்

11,கும்பம் 
இன்று நீங்கள் ஆற்றும் ஒரு செயலானது உங்களையும் உங்களைச் சார்ந்த உங்களுக்கு நெருங்கிய நண்பர்களையும் நல்லதொரு ஆதாயம் பெற செய்யும் அதன் பொருட்டு நல்லதொரு மனநிறைவை  பெறும் நன்நாள் இந்நாள் 

12,மீனம் 
உங்கள் நம்பிக்கை கூறியவர்களே இன்று உங்களை வருத்தத்திற்கு உள்ளாக்க வாய்ப்பு உள்ளது எனவே அனைவரிடத்திலும் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையாகவும் இருந்தால் நல்லதொரு அனுபவம் பெறும்  நன்நாள் இந்நாள்

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில் இணையவும் ...

Join this group to get your today zodiac results  benefits regularly...
ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்சத்திரம் : திருவாதிரை 
 
பரிகாரம் : 
ஆதரவின்றி ரோட்டோரத்தில் ஆடைகள் கிழிந்த நிலையில் தவிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களது பழைய ஆடைகளையோ அல்லது உங்களால் இயன்றால் புது ஆடைகளை அவர்களுக்கு வாங்கித் தருவது இன்றைய நாளை உங்களுக்கு சிறப்பாக்கும்

இன்றைய 
சுப நட்சத்திரம் : திருவோணம் 


திருவோணம்
  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகிலுள்ள பழமையான முருகன் கோவிலுக்கு சென்று ஆறு இளஞ்சிவப்பு தாமரை வாங்கித் தந்து அர்ச்சனை செய்வது மற்றும் மனமுருகி வழிபடுவது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும் .


அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.

1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .

2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.

3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.

இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு 
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள்  இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும்  மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ... 
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம் 
ஓம் நமசிவாய சிவ சிவ

உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ