ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
வளமான வாழ்வு தரும் குரு பெயர்ச்சி பலன்கள் மே-1/2024 புதன்கிழமை
மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு: நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் கிருஷ்ணபக்ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார். உங்கள் நட்சத்திரங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் இதோ..,
1,மேஷம்
மேஷ ராசி அன்பர்களுக்கு
உங்களது ராசிக்கு 2,ல் குரு பகவான் வருவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு இது ஒரு பொற்காலம் என்று கூறலாம் வருமானம் அதிகரிக்கும் பொன் பொருள் சேரும் குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும் வாக்கு கொடுப்பதற்கு முன் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயலாற்றுவது சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத பல விதமான நன்மைகளை உங்களுக்கு தரும் உங்களது குடும்பத்தினர் அனைவரிடமும் நீங்கள் அன்பாக நடந்து கொண்டால் இந்தக் குரு பெயர்ச்சியானது நிச்சயம் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை மேலோங்கச் செய்யும் இதுவரை நீங்கள் காணாததொரு மன மகிழ்ச்சியை காண்பீர்கள் குரு அருளால் திருவருள் கிட்டும் வாழ்வோம் வளமுடன்
2,ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களுக்கு ரிஷபத்திலேயே குரு பெயர்ச்சி ஆகிறார் என்பது புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு இதுவே சரியான நேரம் ஆகும் என்பதை உணர்ந்து உங்களது திறமையை மேம்படுத்துவதற்காக செயல்பட்டால் உங்களைச் சார்ந்தவர்கள் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள் என்பது உறுதி மேலும் தேவையில்லாத வீண் செலவுகளை தவிர்த்து கொடுக்கல் வாங்கலில் மிகவும் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருந்தால் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தினை பெறுவீர்கள் மேலும் உங்களது வாழ்வில் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு புதிய அனுபவத்தை பெற்று உங்களது திறமையை உலகறிய செய்வீர்கள் மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சியானது உங்களை புகழ் பெறச் செய்யும் குரு அருளால் திருவருள் கிட்டும் வாழ்வோம் வளமுடன்
3,மிதுனம்
மிதுன ராசி அன்பர்களுக்கு உங்கள் ராசிக்கு 12,ல் குரு பகவான் மறைகிறார் என்பது உங்களுக்கு வரவிருக்கும் விரயத்தில் இருந்து உங்களைக் காப்பாற்றி நல்லதொரு மேன்மை மிகு அனுபவத்தை பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்பதை நீங்களே உணர்வீர்கள் மேலும் குரு பகவான் அருளால் சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு முன்னேற்றத்தையும் லாபத்தையும் பெறுவீர்கள் அதன் விளைவாக உங்களது வாழ்க்கைத் தரம் உயரும் இந்த குரு பெயர்ச்சியானது நிச்சயம் உங்களது வாழ்க்கை தரத்தினை உயரச் செய்யும் குரு அருளால் திருவருள் கிட்டும் வாழ்வோம் வளமுடன்
4,கடகம்
கடக ராசி அன்பர்களுக்கு உங்களது ராசிக்கு 11-ல் குரு வருகிறார்
உங்களது உழைப்பால் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை பெறுவதற்கு வழி வகுக்கும் அதன் விளைவாக நிதானத்துடன் கலந்த கடின உழைப்பானது உங்களது வாழ்க்கையில் இதுவரை சந்திக்காததொரு லாபத்தை பெற வைக்கும் அதன் விளைவாக சில தடைகளை தாண்டிய பிறகு நீங்கள் எதிர்பார்க்காத ஒரு லாபத்தை பெறுவீர்கள் இந்த குரு பெயர்ச்சியானது சற்றும் நீங்கள் எதிர்பார்க்காததொரு லாபங்களை பெறச் செய்யும் குரு அருளால் திருவருள் கிட்டும் வாழ்வோம் வளமுடன்
5,சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களுக்கு உங்களது ராசிக்கு 10,ல் குரு பகவான் வருகிறார் என்பது அனைத்து நிலைகளிலும் உங்களை முன்னேற்றும் என்பது உறுதி மேலும் உங்களது புதிய முயற்சியால் தொடங்கும் தொழிலானது சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு லாபங்களை சந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளது இந்த குரு பெயர்ச்சியானது உங்களது முன்னேற்றத்தை உறுதி செய்யும் குரு அருளால் திருவருள் கிட்டும் வாழ்வோம் வளமுடன்
6,கன்னி
கன்னி ராசி அன்பர்களுக்கு உங்களது ராசிக்கு 9,குரு பகவான் வருவது என்பது உங்களுக்கு வரவிருக்கும் அனைத்து யோகங்களையும் மிகவும் எளிமையாக உங்களிடம் வந்து சேர்க்கும் அதன் பொருட்டு உங்களது வாழ்வில் யோகங்களை பெறுவீர்கள் மேலும் உங்களது மனநிலையில் யோக கலைகளால் அமைதியும் பெறுவீர்கள் இந்த குரு பெயர்ச்சியானது உங்களுக்கு யோக காலமாக இருக்கும் குருவருளால் திருவருள் கிட்டும் வாழ்வோம் வளமுடன்
7,துலாம்
துலாம் ராசி அன்பர்களுக்கு உங்களது ராசிக்கு 8,ல் குரு பகவான் வருகிறார் இது உங்களுக்கு ஞானத்தை அதிகரிக்கும் காலம் என்பதை நீங்களே உணர்வீர்கள் மேலும் உங்களது வருமானம் உயரும் உங்களது பெயர் புகழ் உயரும் கொடுக்கல் வாங்கலில் சிறிது கவனம் தேவை ஆன்மீக சிந்தனை மேலோங்கும் அதிகமாக தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள் இந்த குரு பெயர்ச்சியானது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இதுவரை நீங்கள் காணாததொரு நல்ல அனுபவங்களை காண்பீர்கள் குரு அருளால் திருவருள் கிட்டும் வாழ்வோம் வளமுடன்
8,விருச்சிகம்
விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு உங்களது ராசிக்கு குரு பகவான் 7,ல் வருகிறார் என்பது உங்களது நெருங்கிய உறவுகளிடம் நீங்கள் காட்டும் அன்பானது உயரும் அதன் பொருட்டு அவர்கள் உங்கள் மீது காட்டும் அன்பானதும் உயரும் உங்களுக்கு கிடைக்காது என்று நீங்கள் நினைத்த ஒரு பொருள் நிச்சயம் உங்களுக்கு எளிமையாக கிடைக்கும் மேலும் வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும் புதிய முயற்சிகளில் முதலீடு செய்வதற்கு முன் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தினையும் பெறுவீர்கள் இந்த குரு பெயர்ச்சியானது உங்களைச் சார்ந்த அனைவருக்கும் அன்பிற்குரியவர்களாக உங்களை காட்டும் குரு அருளால் திருவருள் கிட்டும் வாழ்வோம் வளமுடன்
9,தனுசு
தனுசு ராசி அன்பர்களுக்கு உங்களது ராசிக்கு 6,ல் குரு பகவான் மறைகிறார் என்பது நிச்சயம் உங்களுக்கு நல்ல பலன்களையே தரும் உங்களது கடன்கள் அடையும் நீண்ட நாள் இருந்த உடல் தொந்தரவுகள் தீரும் உங்களது எதிரிகளை வெல்வீர்கள் மேலும் உங்களுக்கு வரவிருக்கும் பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு அனைவரிடமும் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து நிதானத்தை கடைபிடிப்பது அவசியம் இந்த குரு பெயர்ச்சி ஆனது உங்களது ஆசைகளை நிறைவேற்றித் தரும் குருவருளால் திருவருள் கிட்டும் வாழ்வோம் வளமுடன்
10,மகரம்
மகர ராசி அன்பர்களுக்கு உங்களது ராசிக்கு 5,ல் குரு பகவான் வருகிறார் உங்களது பூர்வ ஜென்ம புண்ணிய பலன்களை முழுமையாக உங்களுக்கு தருவார் மேலும் உங்களது புத்தி கூர்மை அதிகரிக்கும் ஒரு நிலையான அங்கீகாரத்தை பெறுவீர்கள் உங்களது வருமானம் பன்மடங்கு உயரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம் சகோதர சகோதரிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வது உங்களது வாழ்க்கையில் உங்களை முன்னேறச் செய்யும் இந்த குரு பெயர்ச்சியானது உங்களை அங்கீகாரம் பெறச் செய்து முழு வெற்றியையும் பெற செய்யும் குரு அருளால் திருவருள் கிட்டும் வாழ்வோம் வளமுடன்
11,கும்பம்
கும்ப ராசி அன்பர்களே உங்களது ராசிக்கு 4,ல் குரு பகவான் வருகிறார்உங்களுக்கு வரவிருக்கும் அனைத்து நன்மைகளையும் எந்தத் தடைகளும் இன்றி உங்களை வந்து சேரும் உங்களது இதயத்தை பலப்படுத்தும் உணவு பொருள்களை உட்கொள்வது அவசியம் உங்களது தாயார் உடல் நலனில் கவனம் தேவை நீண்ட நாள் சில தடைகளை சந்தித்துக் கொண்டிருந்த உங்களுக்கு அனைத்து தடைகளும் விலகுவதை நீங்களே உணர்வீர்கள் இந்த குரு பெயர்ச்சியானது தடைகளை உடைத்து தரமான வாழ்வினை உங்களுக்குத் தரும் குருவருளால் திருவருள் கிட்டும் வாழ்வோம் வளமுடன்
12,மீனம்
மீன ராசி அன்பர்களே உங்களது ராசிக்கு 3,ல் குரு பகவான் வருகிறார் இதுவரை உணராதொரு தைரியத்தினை உணர்வீர்கள் உங்களது மனதைரியம் அதிகரிக்கும் உங்களது தைரியத்தால் யாராலும் செய்ய முடியாத பல கடினமான செயல்களையும் எளிமையாக நீங்கள் செய்து முடிப்பீர்கள் அதன் பொருட்டு அனைவரிடத்திலும் பாராட்டு பெறுவீர்கள் மற்றும் நல்லதொரு லாபத்தையும் பெறுவீர்கள் இந்த குரு பயிற்சியானது உங்களுக்கு வலிமையான மன தைரியத்தினை தரும் குரு அருளால் திருவருள் கிட்டும் வாழ்வோம் வளமுடன்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results benefits regularly...
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி
வாழ்க வளமுடன்