Today Zodiac Results இன்றைய ராசி பலன்கள் ஜூலை-20/2024- சனிக்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 

வளமான வாழ்வை தரும் குரு பெயர்ச்சி பலன்கள் click here...

தினராசி பலன் பற்றிய விளக்கம் 

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது... 

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...

Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...

இன்றைய ராசி பலன்கள் -ஜூலை -20/2024- சனிக்கிழமை 

1,மேஷம் 
உங்களது நல்ல மனம் புரியாமல் உங்களை வருத்தப்படுத்திய அவர்களே அவர்கள் செய்த தவறு என்று உணர்ந்து உங்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு வாய்ப்புள்ளது அதன் காரணமாக அனைவரிடத்திலும் உங்களது மதிப்பு உயரும் நன்நாள் இந்நாள்.

2,ரிஷபம் 
உங்களைச் சார்ந்தவர்களின் நலனுக்காக இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நல்லதொரு அனுபவத்தையும், நல்லதொரு வெற்றியையும்  பெறும் நன்நாள் இந்நாள்.

3,மிதுனம் 
உங்கள் உறவினர்களால் சில மன வருத்தங்களை சந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளது. என்பதை உணர்ந்து அனைத்து உறவுகளிடத்திலும் சிறு இடைவேளை விட்டு தொடர்வது உங்கள் மனதை நிம்மதி பெறச் செய்யும்  நன்நாள் இந்நாள்.

4,கடகம் 
உங்களது முன்னேற்றத்திற்காக சில கடுமையான சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது அதில் சில தடைகளையும் சந்திக்க வாய்ப்புள்ளதுஇருந்தாலும் உங்களது கடுமையான முயற்சியாலும் தெய்வத்தின் அருளாலும் நல்லதொரு வெற்றியை பெறுவீர்கள் நன்நாள் இந்நாள்.

5,சிம்மம் 
உங்களது கர்ம வினையின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் சில புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள் அதன் பொருட்டு நல்லதொரு மன அமைதி  பெறும் நன்நாள் இந்நாள்.

6,கன்னி 
உங்களால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்வீர்கள் அதனால் பயனடைந்தவர்கள் உங்களை வாழ்த்துவார்கள் அதன் பொருட்டு இனம் புரியாததொரு மன நிறைவு  பெறும்  நன்னாள் இந்நாள்.

7,துலாம் 
உங்களுக்கு தேவையான சில புதிய பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது அதன் காரணமாக உங்கள் மனம் மகிழ்ச்சி  பெறும் நன்நாள் இந்நாள்.

8,விருச்சிகம் 
சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு நல்ல பரிசுகளை பெறுவதற்கு வாய்ப்பு அதன் காரணமாகஇனம் புரியாததொரு மனமகிழ்ச்சி  பெறும் 
நன்நாள் இந்நாள்.

9,தனுசு 
உங்களைச் சார்ந்தவர்களின் சில செயல்கள் உங்களை வருத்தம் அடைய செய்வதற்கு வாய்ப்பு உள்ளது இருப்பினும் உங்களது மன தைரியத்தால் நல்லதொரு அனுபவத்தையும்,நல்லதொரு மனதெளிவையும்  பெறும்  நன்நாள் இந்நாள் .

10,மகரம் 
உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை உஷ்ணம் சம்பந்தப்பட்ட உபாதைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து நல்லதொரு ஆரோக்கியம் நிறைந்த உணவுகள் மற்றும் குளிர்ச்சி நிறைந்த உணவுகளை உட்கொண்டு ஓய்வெடுத்தால் நல்லதொரு நலம்  பெறும் நன்நாள் இந்நாள்.

11,கும்பம் 
உங்களது தைரியம் நிறைந்த துணிச்சலால் இன்று உங்களுக்கு வரவிருக்கும் அனைத்து சவால்களிலும் இருந்து வெற்றி பெறுவீர்கள்  நன்நாள் இந்நாள்.

12,மீனம் 
உங்களது உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை அடி வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து சூடு சம்பந்தப்பட்ட உணவுகளை தவிர்த்து குளிர்ச்சியான உணவு வகைகளை உட்கொண்டு நேரம் கிடைக்கும் போது சிறிது ஓய்வெடுத்தால் நலம்  பெறும் நன்நாள் இந்நாள்.

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில் இணையவும் ...

Join this group to get your today zodiac results  benefits regularly...
ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்சத்திரம் : கிருத்திகை  
 
பரிகாரம் : 
ஆதரவில்லாமல் தவிக்கும் கண் பார்வை அற்றவர்களுக்கு அவர்களுக்கு தேவையான உங்களால் இயன்ற மருத்துவ உபகரணங்களை வாங்கி தருவது மற்றும்அவர்களுக்கு தேவையான உங்களால் இயன்ற பொருள் உதவிகளை   செய்வது இன்றைய நாளை மேலும்  சிறப்பாக்கும்.


இன்றைய சுப நட்சத்திரம் : பூராடம் 

பூராடம் 
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம்புல் வாங்கித் தந்து அர்ச்சனை செய்வது மற்றும் உங்களால் இயன்றால் ஏழு தோப்புக்கரணம் போட்டு மனம் உருகி வழிபடுவது   இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும் .
 

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.

1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .

2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.

3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.

இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு 
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள்  இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும்  மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ... 
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம் 
ஓம் நமசிவாய சிவ சிவ

உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ