இன்றைய ராசி பலன்கள் ஆகஸ்ட்-14/2026- வெள்ளிக்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

கர்ம வினையின் சூட்சுமமும், மர்மம் நிறைந்த கருணையும்  click here 

இன்றைய ராசி பலன்கள் -ஆகஸ்ட்    -14/2026- வெள்ளிக்கிழமை  

1,மேஷம் 
நீங்கள் செய்யும் ஒரு செயலை கண்டு அனைவரும் வியந்து உங்களை பாராட்டுவார்கள் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி  பெறும் நன்நாள் இந்நாள்


2, ரிஷபம் 
உங்களைச் சார்ந்தவர்கள் நீங்கள் தரும் அறிவுரைகளை கேட்காததால் சில சிரமங்களை சந்திப்பார்கள் அதைக் கண்டு உங்கள் மனம் வருத்தம் அடைய வாய்ப்பு உள்ளது இருந்தாலும் உங்களது ஆன்மீக சிந்தனையால் உங்கள் மனம் அமைதி பெறும் நன்நாள் இந்நாள்

3, மிதுனம்
உடல் ஆரோக்கியத்தில்  கவனம் தேவை உணவு செரிமான மண்டலத்தில் உபாதைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து எளிமையாக செரிமானம் ஆகும் உணவுகளை மட்டுமே உட்கொண்டால் நலம்  பெரும்  நன்நாள் இந்நாள்

4, கடகம்
நீண்ட நாள் நீங்கள் எதிர்பார்த்த  நன்மை  இன்று உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது அதன் விளைவாக நல்லதொரு இனிமையான அனுபவம் பெறும் நன்நாள் இந்நாள் 

5, சிம்மம்
உங்களுக்குத் தேவையான ஒரு பொருள் தொலைந்து போக வாய்ப்புள்ளது மேலும் வீண் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து மிகவும் விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருந்தால் நலம்   பெறும் நன்நாள் இந்நாள்

6, கன்னி
உங்களுக்கு நெருங்கிய உறவுகளால் சற்று மன வருத்தமடைய வாய்ப்பு உள்ளது எனவே அனைவரிடத்திலும் உங்களது வாக்கு பிரயோகத்தை நிதானப்படுத்தினால் உங்கள் மனம் அமைதி பெறும் நன்னாள்  இந்நாள் 

7, துலாம்
தேவையில்லாத அலைச்சல்களையும் வீண் வாக்குவாதங்களையும் தவிர்ப்பது நல்லது என்று நீங்களே உணர்ந்ததன் விளைவாக நிதானத்தை கடைப்பிடித்து  நலம்  பெறும் நன்நாள் இந்நாள் 

8, விருச்சிகம்
உஷ்ணம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து உடலை குளிர்ச்சியூட்டும் உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு மற்றும் எளிமையாக செரிமானமாகும் உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டால் சுகம் பெறும் நன்நாள் இந்நாள்  

9, தனுசு 
உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் சில தவறுகளால் உங்கள் மனம் வருத்தம் அடைய வாய்ப்பு உள்ளது மேலும் சில சவால்களையும் சந்திக்க நேரிடும் எனவே மிகுந்த கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட்டால் அனைத்திலும் நலம்  பெறும்  நன்நாள் இந்நாள் 

10, மகரம்
எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் இனம் புரியாத ஒரு பயமும் ஏற்பட வாய்ப்புள்ளது இருப்பினும் நீங்கள் செய்த புண்ணியத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் நீங்கள் வெற்றி பெற  போவதை உணர்ந்ததன் விளைவாக உங்கள் மனம் அமைதி பெறும்  நன்நாள் இந்நாள் 
11, கும்பம் 
உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை உணவு ஒவ்வாமையால் சிரமப்பட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்துக் எடுத்துக்கொண்டு இன்று ஓய்வெடுத்தால் நலம்  பெறும் நன்நாள் இந்நாள்
12, மீனம் 
உங்களது நேர்மை குணத்தால் இன்று சில சவால்களை சந்திக்க வாய்ப்புள்ளது இருப்பினும் உங்களது நேர்மை குணமே இன்று உங்களை நலம் பெற செய்யும் அதன் பொருட்டு உங்கள் மனம் பெருமிதம் பெறும்  நன்நாள் இந்நாள்
ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : 
அவிட்டம்  
 
பரிகாரம் : 
ரோட்டோரம் தவிக்கும் ஆதரவு  இல்லாத முதியவர்களுக்கு  உணவு தண்ணீர்  தருவது மற்றும் அவர்கள் உடல் நலனை மேம்படுத்தும் வகைகளில் மருந்துகள்   வாங்கி தருவது  மேலும் அவர்களுக்குத் தேவையான உங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்வது 
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும் 

இன்றைய சுப 
நட்சத்திரம் : பூரம் 

பூரம்
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகிலுள்ள பழமையான பெருமாள் கோவிலுக்கு சென்று பள்ளிகொண்ட பெருமாள் தரிசனம் பார்ப்பது துளசி கற்கண்டு வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்வது மற்றும் மனம் உருகி வழிபடுவது   இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...


ஆதிசிப்பன் பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here 


ஆதி சிவம் பவுண்டேஷன் நடத்தும் ஆதிசிவ யோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள்
மேலும் படிக்க click here 

தினராசி பலன் பற்றிய விளக்கம் 
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here 

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here 


உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 

அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more


உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார் 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ