இன்றைய ராசி பலன்கள் செப்டம்பர் -26/2026-சனிக்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

கர்ம வினையின் சூட்சுமமும், மர்மம் நிறைந்த கருணையும்  click here 

இன்றைய ராசி பலன்கள் -செப்டம்பர் -26/2026- சனிக்கிழமை  

1,மேஷம் 
உங்களை சார்ந்தவர்களின் நலனுக்காக நீங்கள் செய்யும் ஒரு செயலானது உங்களைச் சார்ந்தவர்களையும், உங்களையும் நலம் பெற செய்யும் அதன் பொருட்டு உங்களது ஆழ்மனமானது இனம் புரியாததொரு மகிழ்ச்சி  பெறும் நன்நாள் இந்நாள் 

2,ரிஷபம் 
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை தலைவலி செரிமான கோளாறு போன்ற உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து எளிமையாக செரிமானம் ஆகும் உணவு வகைகளை உட்கொண்டு தேவையில்லாத வீண் அலைச்சல்களை தவிர்த்து ஓய்வெடுத்தால் நல்லதொரு நலம் பெறும் நன்நாள் இந்நாள்  

3,மிதுனம் 
நீண்ட நாள் நீங்கள் எதிர்பார்த்து நடக்காத ஒரு செயல் இன்று உங்களது விடா முயற்சியின் விளைவால் நீங்கள் நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் அதன் பொருட்டு நல்லதொரு மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள் 

4,கடகம் 
உங்களது பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனால் உங்களை அறியாமலேயே சில புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள் அதன் பொருட்டு இனம் புரியாததொரு மனநிறைவு பெறும்  நன்நாள் இந்நாள் 

5,சிம்மம் 
நீங்கள் எதிர்பார்க்காத வழிகளில் இருந்து சில பணவரவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இன்நாள்


6,கன்னி 
சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத சில பயணங்களை மேற்கொள்வீர்கள் அதன் காரணமாக புதுவிதமான அனுபவங்களை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது அதன் பொருட்டு நல்லதொரு மன நிறைவு பெறும்  நன்நாள் இந்நாள் 

7,துலாம் 
உங்களது புத்திக் கூர்மையின் வலிமையால்  பிறர் செய்ய தயங்கும் ஒரு செயலில்மிகத் துணிச்சலாக இறங்கி அதில் யாரும் எதிர்பார்க்காதவாறு மாபெரும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. அதன் பொருட்டு அனைவரிடத்திலும் நல்லதொரு பாராட்டு  பெறும் நன்நாள் இந்நாள்

8,விருச்சிகம் 
தேவையில்லாத சில செயல்களில் ஈடுபட்டு அதில் தேவையில்லாத சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து மிகுந்த கவனத்துடன் செயல்பட்டால் நல்லதொரு பக்குவம் நிறைந்த நலம்  பெறும்  நன்நாள் இந்நாள்


9,தனுசு 
உங்களது குலதெய்வத்தின் அருளாலும் நீங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாலும் சற்றும் நீங்கள் எதிர்பார்க்காததொரு நல்ல அனுபவத்தையும் நல்லதொரு லாபத்தையும் பெறும்  நன்நாள் இந்நாள்

10,மகரம் 
புதுவிதமான அணுகுமுறைகளை பயன்படுத்தி உங்களது முன்னேற்ற பாதையை நீங்களே உருவாக்கி அதில் வெற்றி நடை போடும் நாள். அதன் பொருட்டு உங்கள் மனம் மனநிறைவு  பெறும் நன்நாள் இந்நாள் 
11,கும்பம் 
தேவையில்லாத சில மன உளைச்சல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்த்து வீண் வாக்குவாதங்களை தவிர்த்து இன்று நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் அமைதியாக இருந்தால் நல்லதொரு மனநிலை பெற்று அதன் பொருட்டு நலம் பெறும்  நன்நாள் இந்நாள் 
12,மீனம் 
உங்களது மேன்மை மிகு குணத்தால் உங்களைச் சார்ந்தவர்கள் செய்யும் அனைத்து தவறுகளையும் பொறுத்துக் கொண்டு அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக சில நன்மைகளை செய்து அதில் வெற்றி காண்பீர்கள் அதன் பொருட்டு உங்களது மனம் மேலும் மேன்மை  பெறும்  நன்நாள் இந்நாள் 
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results  benefits regularly...
ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் :
மகம்,பூரம்  
 
பரிகாரம் :
புத்தி பேதலித்து ஆதரவின்றி தவிக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும், தண்ணீர் தானம் தருவது மற்றும், அவர்களுக்கு வஸ்திர தானம் தருவது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும் 

இன்றைய 
சுப நட்சத்திரம் : உத்திரட்டாதி    

உத்திரட்டாதி
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்அருகிலுள்ள பழமையான முருகன் கோவிலுக்கு சென்று அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பின் அங்குள்ள தக்ஷனா மூர்த்தி குரு பகவானை 5 நெய் விளக்கு ஏற்றி  மனம் உருகி வழிபடுவது  இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...


ஆதிசிவம்  பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here 


ஆதி சிவம் பவுண்டேஷன் நடத்தும் ஆதிசிவ யோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள்
மேலும் படிக்க click here 

தினராசி பலன் பற்றிய விளக்கம் 
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here 

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here 


உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 

அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more


உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார் 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ