ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
இன்றைய ராசி பலன்கள் -ஆகஸ்ட் -13/2026- வியாழக்கிழமை
1,மேஷம்
உங்கள் அன்பிற்குரியவர்களால் உங்களுக்கு தேவையான சில பரிசுகள் கிடைக்கும் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
தேவையில்லாத வீண் செலவுகளை தவிர்ப்பதுஅவசியம் என்பதை உணர்ந்ததன் விளைவாக சிக்கனத்தை கடைபிடித்து சேமிப்பை உயர்த்தும் நாள் அதன் பொருட்டு உங்களது பொருளாதார நிலை உயரும் நன்நாள் இந்நாள்
3, மிதுனம்
உங்களது முன்னேற்றத்திற்காக நீங்கள் செய்யும் செயலானது நீங்கள் நினைத்ததை விட பல மடங்கு நன்மையை உங்களுக்கு தரும் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
சற்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைஉணவு ஒவ்வாமை சம்பந்தப்பட்ட உபாதைகள் வர வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து உணவு விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருந்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
உங்களுடன் பயணிப்பவர்கள் இன்று உங்கள் மீது குறை கூற வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து அனைத்து செயல்களிலும் நிதானத்துடனும் கவனத்துடனும் செயல்பட்டால் பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
உங்களுக்கு மிக நம்பிக்கை கூறியவர்களின் உண்மை முகம் அறியும் நாள் அதன் பொருட்டு நல்லதொரு பக்குவம் பெறும் நன்னாள் இந்நாள்
7, துலாம்
இன்று நீங்கள் செய்யும் சில செயல்கள் ஆனது உங்கள் வாழ்வில் புண்ணியங்களை சேர்க்கும் அதன் பொருட்டு இனம் புரியாத மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
தேவையில்லாத சில குழப்பங்களால் உங்கள் மனம் வருத்தம் அடைய வாய்ப்பு உள்ளது இருப்பினும் மதியத்திற்குப் பின் குழப்பங்கள் அனைத்தும் விலகி நல்லதொரு மனத் தெளிவை பெறும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
உங்களைச் சார்ந்தவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக சில சவால்களை சந்திக்க நேரிடும் உங்களது முயற்சியால் உங்கள் மீதான அனைவரின் நம்பிக்கையும் காப்பாற்றி பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
தேவையில்லாத அலைச்சல்களையும் துளியும் பயனில்லாத செயல்களையும் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து சற்று சிந்தித்து செயலாற்றினால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
11, கும்பம்
உங்களால் பயனடைந்த சிலர் உங்களுக்கு தேவையான நேரத்தில் உதவிகளை செய்து உங்களை நலம் பெற செய்வார்கள் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழும் நன்நாள் இந்நாள்
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : திருவோணம்
ஆதரவில்லாமல் தவிக்கும் ஒன்பது வயது மதிக்கத்தக்க பெண் குழந்தைகளுக்கு புதிய உடைகள் வாங்கித் தருவது மற்றும் அவர்களுக்கு விருப்பமான ஆரோக்கியம் மிகுந்த உணவுப் பொருட்களை வாங்கி தருவது பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய சுப நட்சத்திரம் : ஆயில்யம்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
ஆதிசிப்பன் பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here
அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more
உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார்
வாழ்க வளமுடன்