ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
இன்றைய ராசி பலன்கள் -செப்டம்பர் -09/2026- ஞாயிற்றுக்கிழமை
1,மேஷம்
உங்களுக்கு இறைவன் அருள் பரிபூரணமாக இருப்பதை நீங்களே உணரும் நாள் அதன் பொருட்டு உங்கள் மனம் இனம் புரியாத பேரானந்தம் பெறும் நன்நாள் இந்நாள்.
2,ரிஷபம்
உங்களது பெருந்தன்மையான குணத்தை கண்டு உங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் உங்களைப் பெருமைப்படுத்துவார்கள் அதன் விளைவாக உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்.
3,மிதுனம்
உங்களுக்கான முன்னேற்ற பாதையை உங்களது முயற்சியால் நீங்களே உருவாக்கி அதில் வெற்றி நடை போடும் நன்நாள் இந்நாள்.
4,கடகம்
உங்களைச் சார்ந்தவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக கடுமையான சில சவால்களை சந்திக்க வாய்ப்புள்ளது இருப்பினும் உங்களது தன்னம்பிக்கையால் வெற்றி பெறும் நன்நாள் இந்நாள்.
5,சிம்மம்
இன்று நீங்கள் ஆற்றும் ஒரு செயலானது உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் நலம் பெற செய்யும் என்பதை உணர்ந்ததன் விளைவாக உங்கள் மனம் நிறைவு பெறும் நன்நாள் இந்நாள்.
6,கன்னி
அனைவரும் செய்ய தயங்கும் ஒரு செயலை சிறிதும் யோசிக்காமல் துணிச்சலுடன் செய்து இறை அருளாலும் உங்கள் முயற்சியாலும் வெற்றி பெறும் நன்நாள் இந்நாள்.
7,துலாம்
நீண்ட நாள் நீங்கள் எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி உங்களது விடாமுயற்சியின் விளைவாக இன்று உங்களுக்கு வரும் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்.
8,விருச்சிகம்
இனம் புரியாத ஒரு வருத்தமும் வெளியில் சொல்ல முடியாத சில கவலைகளும் வர வாய்ப்புள்ளது இருப்பினும் ஆன்மீக சிந்தனை அதிகரித்துக் கொண்டால் நல்லதொரு நலமும் நிம்மதியும் பெறும் நன்நாள் இந்நாள்.
9,தனுசு
உங்களைச் சார்ந்தவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பலப்படுத்தும் வகைகளில் இருக்கும் இன்று உங்களது செயல் அதன் பொருட்டு அனைவராலும் பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்.
10,மகரம்
உங்களது முன் கோபத்தால் உங்களுக்கு நெருக்கமான சில உறவுகளை காயப்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொண்டு நிதானத்தை கடைப்பிடித்தால் உங்களைச் சார்ந்தவர்களும் நீங்களும் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்.
11,கும்பம்
உங்களைச் சார்ந்தவர்கள் செய்யும் சில செயலால் உங்கள் மனம் வருத்தம் அடைய வாய்ப்பு உள்ளது எனவே விழிப்புணர்வுடன் இருந்து நிதானத்தை கடைபிடித்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்.
12,மீனம்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results benefits regularly...
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : கேட்டை, மூலம்
உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் யாரேனும் வறுமை நிலையில் இருப்பார்களேயானால் அவர்களுக்கு தேவையான மற்றும் உங்களால் இயன்ற பொருள் உதவியை செய்வது பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்.
இன்றைய சுப நட்சத்திரம் : புனர்பூசம்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
ஆதிசிவம் பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here
அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more
உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார்
வாழ்க வளமுடன்