இன்றைய ராசி பலன்கள் செப்டம்பர் 01/2026-செவ்வாய்க்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

கர்ம வினையின் சூட்சுமமும், மர்மம் நிறைந்த கருணையும்  click here 

இன்றைய ராசி பலன்கள் -செப்டம்பர்  -01/2026- செவ்வாய்க்கிழமை   

1,மேஷம் 
உங்களுக்கு நெருங்கிய உறவுகளால் சற்று மன வருத்தமடைய வாய்ப்பு உள்ளது எனவே அனைவரிடத்திலும் உங்களது வாக்கு பிரயோகத்தை நிதானப்படுத்தினால் உங்கள் மனம் அமைதி பெறும் நன்னாள்  இந்நாள் 

2,ரிஷபம் 
தேவையில்லாத அலைச்சல்களையும் வீண் வாக்குவாதங்களையும் தவிர்ப்பது நல்லது என்று நீங்களே உணர்ந்ததன் விளைவாக நிதானத்தை கடைப்பிடித்து  நலம்  பெறும் நன்நாள் இந்நாள் 

3,மிதுனம் 
உஷ்ணம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து உடலை குளிர்ச்சியூட்டும் உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு மற்றும் எளிமையாக செரிமானமாகும் உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டால் சுகம் பெறும் நன்நாள் இந்நாள்  

4,கடகம் 
உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் சில தவறுகளால் உங்கள் மனம் வருத்தம் அடைய வாய்ப்பு உள்ளது மேலும் சில சவால்களையும் சந்திக்க நேரிடும் எனவே மிகுந்த கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட்டால் அனைத்திலும் நலம்  பெறும்  நன்நாள் இந்நாள் 

5,சிம்மம் 
எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் இனம் புரியாத ஒரு பயமும் ஏற்பட வாய்ப்புள்ளது இருப்பினும் நீங்கள் செய்த புண்ணியத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் நீங்கள் வெற்றி பெற  போவதை உணர்ந்ததன் விளைவாக உங்கள் மனம் அமைதி பெறும்  நன்நாள் இந்நாள் 

6,கன்னி 
உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை உணவு ஒவ்வாமையால் சிரமப்பட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்துக் எடுத்துக்கொண்டு இன்று ஓய்வெடுத்தால் நலம்  பெறும் நன்நாள் இந்நாள்

7,துலாம் 
உங்களது நேர்மை குணத்தால் இன்று சில சவால்களை சந்திக்க வாய்ப்புள்ளது இருப்பினும் உங்களது நேர்மை குணமே இன்று உங்களை நலம் பெற செய்யும் அதன் பொருட்டு உங்கள் மனம் பெருமிதம் பெறும்  நன்நாள் இந்நாள்

8,விருச்சிகம் 
இனம் புரியாத ஒரு பயமும் வருத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது  என்பதை உணர்ந்து  ஆன்மீக சிந்தனையை அதிகரித்துக் கொண்டால் நலம் பெறும் நன்நாள் இந்நாள் 

9,தனுசு 
உங்கள் அன்பிற்குரியவர்களுக்காக நீங்கள் செய்யும் ஒரு செயல் அவர்களை மட்டும் அல்லாமல் உங்களையும் மகிழ்ச்சி அடைய செய்யும் மகிழ்ச்சி பெறும்   நன்நாள் இந்நாள்
10,மகரம் 
நீங்கள் ஆற்றும் செயல்களில் உங்களை அறியாமலே  புண்ணியங்ள் அதிகரிக்கும் அதன் விளைவாக இனம் புரியாதொரு மன அமைதியும் மன மகிழ்ச்சியும் பெறும்  நன்நாள் இந்நாள்
11,கும்பம் 
உங்கள் மனம் நோகும்படி செய்த சிலர் அவர்கள் செய்தது தவறு என்று உணர்வார்கள் அதன் பொருட்டு உங்கள் புகழ் அதிகரிக்கும் நன்நாள் இந்நாள் 
12,மீனம் 
உங்கள் குடும்பத்தினரால் சற்று உங்கள் மனம் வருத்தம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில் இணையவும் ...

Join this group to get your today zodiac results  benefits regularly...
ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : 
அஸ்தம் 
 
பரிகாரம் :
வறுமை நிலையில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு படிப்பிற்கான உங்களால் இயன்ற மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது 
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும் 

இன்றைய சுப 
நட்சத்திரம் : அஸ்வினி 

அஸ்வினி 
 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகிலுள்ள பழமையான பெருமாள் கோவிலுக்கு சென்று பள்ளிகொண்ட பெருமாள் தரிசனம் பார்ப்பது துளசி கற்கண்டு வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்வது மற்றும் மனம் உருகி வழிபடுவது   இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...


ஆதிசிவம்  பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here 


ஆதி சிவம் பவுண்டேஷன் நடத்தும் ஆதிசிவ யோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள்
மேலும் படிக்க click here 

தினராசி பலன் பற்றிய விளக்கம் 
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here 

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here 


உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 

அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more


உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார் 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ