இன்றைய ராசி பலன்கள் ஆகஸ்ட் -06/2026-வியாழக்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

கர்ம வினையின் சூட்சுமமும், மர்மம் நிறைந்த கருணையும்  click here 

இன்றைய ராசி பலன்கள் -ஆகஸ்ட்    -06/2026- வியாழக்கிழமை  

1,மேஷம் 
தேவையில்லாத அலைச்சல்களை  தவிர்ப்பதும் வாகனங்களில் செல்லும்பொழுது கவனமாக இருப்பதும்  இன்று உங்களுக்கு நல்லதொரு நன்மையை தரும் நன்நாள் இந்நாள்

2, ரிஷபம் 
இன்று நீங்கள் ஆற்றும் ஒரு செயல் ஆனது பரிபூரணமாக இறைவனின் அருளை நீங்கள் பெற உறுதுணையாக இருக்கும் அதன் பொருட்டு நீங்கள் புண்ணியம்   பெறும்  நன்நாள் இந்நாள்

3, மிதுனம்
தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது மற்றும் இன்று உங்கள் நிலை அறிந்து செலவுகளை குறைப்பது உங்களை நலம் பெற செய்யும் என்பதை உணர்ந்ததன் விளைவாக இன்று உங்கள் மனம் மகிழ்ச்சி  பெறும்  நன்நாள் இந்நாள்

4, கடகம்
பல நாட்களாக உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்த ஒரு நன்மை இன்று உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது மேலும் திடீர் யோகத்தால் நல்லதொரு லாபம்   பெறும்  நன்நாள் இந்நாள் 

5, சிம்மம்
உங்களது முன்னேற்றப் பாதையை நோக்கிய உங்களது பயணத்தில் சற்றும் எதிர்பார்க்காத ஒரு நபரிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் உதவியால் மிகப்பெரிய ஒரு நல்லதொரு ஆதாயத்தை  பெறும்  நன்நாள் இந்நாள்

6, கன்னி
அனைத்தும் முடிந்து விட்டது என நீங்கள் நினைக்க வாய்ப்புள்ளது இருந்தாலும் உங்களது பூர்வ ஜென்ம புண்ணியத்தின் ஒரு நற்பலனாக இன்று நடக்கவிருக்கும் சில நிகழ்வுகள் உங்களது வாழ்வில் நீங்கள் முன்னேற மிகவும் உறுதுணையாக இருக்கும் அதனால் உங்கள் மனம் மகிழ்ச்சி   பெறும் நன்நாள் இந்நாள் 

7, துலாம்
வெளியில் சொல்ல முடியாத சில மன வருத்தங்களால் இன்று நீங்கள் சற்று சோர்வாக காணப்படுவீர்கள்  இருந்தாலும் இறைவன் மீதான நம்பிக்கையால் நல்ல மன வலிமையை பெறும்  நன்நாள் இந்நாள் 

8, விருச்சிகம்
உங்களது நெருங்கிய நண்பர்களிடம் மிகுந்த கவனம் தேவை அவர்களால் இன்று உங்கள் மனம் வருத்தம் அடைய வாய்ப்புள்ளது அனைவரிடத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்பதை உணர்ந்து செயலாற்றினால் நல்லதொரு நலம்   பெறும் நன்நாள் இந்நாள்  

9, தனுசு 
தேவையில்லாத அலைச்சல்களையும் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களையும் தவிர்ப்பது நல்லது வாக்கு கொடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்பட்டால் நல்லதொரு அனுபவம்  பெறும் நன்நாள் இந்நாள் 
10, மகரம்
உங்களது குலதெய்வத்தின் துணையினால் உங்களுக்கு வரவிருக்கும் ஒரு துன்பத்திலிருந்து விடுபட்டு நிம்மதி பெருமூச்சு விடும் நாள் அதனால் உங்கள் மனம் அமைதி  பெறும் நன்நாள் இந்நாள் 
11, கும்பம்
நீண்ட நாள் தள்ளிச்சென்ற  நீங்கள் பெறவேண்டிய ஒரு நன்மையை உங்களது முயற்சியால் இன்று பெறுவீர்கள் அதனால் உங்கள் மனம் நிறைவு நிலை  பெறும் நன்நாள் இந்நாள்
 12, மீனம் 
உங்களோடு இறைவன் துணை நிற்பதை உணர்வுபூர்வமாக இன்று நீங்கள் உணர்வீர்கள் அதன் பொருட்டு உங்கள் மனம் அமைதி  பெறும் நன்நாள் இந்நாள் 
ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : சித்திரை,சுவாதி  
 
பரிகாரம் : 
வறுமை நிலையில் உள்ள நோயாளிகளுக்கு அவர்களுக்குத் தேவையான மற்றும் உங்களால் இயன்ற பொருள் உதவியை செய்வது பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும் 

இன்றைய சுப நட்சத்திரம் : பரணி    

பரணி
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்வது மற்றும் பெருமாள் கோவிலில் நடக்கும் அன்னதானத்திற்கு உங்களால் இயன்ற உதவியை செய்வது  இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்.

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...


ஆதிசிவம்  பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here 


ஆதி சிவம் பவுண்டேஷன் நடத்தும் ஆதிசிவ யோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள்
 மேலும் படிக்க click here 

தினராசி பலன் பற்றிய விளக்கம் 
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here 

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here 


உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 

அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more


உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார் 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ