ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
இன்றைய ராசி பலன்கள் -ஆகஸ்ட் -04/2026- செவ்வாய்க்கிழமை
1,மேஷம்
தேவையில்லாத மனக்குழப்பங்களால் சில வருத்தங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது இருப்பினும் உங்களது குலதெய்வத்தின் அருளாலும் உங்களது இஷ்ட தெய்வத்தின் அருளாலும் அனைத்து குழப்பங்களில் இருந்தும் வெளிவந்து நல்லதொரு மனத் தெளிவையும் ஞானத்தையும் பெறும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
நீங்கள் எதிர்பார்க்காத சிறு சிறு விரயங்களை சந்திக்க வாய்ப்புள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நல்லதொரு அனுபவத்தையும் லாபமும் பெறும் நன்நாள் இந்நாள்
3, மிதுனம்
உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும் உங்கள் பொறுப்புகளை உணர்ந்து சிறப்பான ஒரு செயலை செய்து அதன் விளைவாக பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
உங்களுக்கான முன்னேற்ற பாதையில் சில தடைகள் வரும் இருப்பினும் அனைத்து சவால்களையும் கடந்து உங்களுக்கான முன்னேற்ற பாதையில் நீங்கள் இன்று வெற்றி நடை போடும் நாள் அதன் பொருட்டு நீங்கள் பெருமிதம் பெறும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
உங்களைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து நன்மைகளையும் செய்து கொடுத்து அதில் நீங்கள் இன்பம் காணும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
குருட்டுத்தனமான நம்பிக்கையில் யாருக்கும் ஜாமின் கொடுக்கக் கூடாது என்பதை உணர்ந்து இன்று நீங்கள் செயல்பட்டால் உங்களுக்கு வரவிருக்கும் சில துன்பங்களில் இருந்து விலகி நலம் பெறும் நன்நாள் இந்நாள்
7, துலாம்
உங்களை வருத்திக் கொண்டு இன்று நீங்கள் ஆற்றும் ஒரு செயலானது உங்களைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் மிகப்பெரும் நன்மைகளை தரும் அதைக் கண்குளிரக் கண்டு உங்கள் துன்பங்கள் அனைத்தும் விலகும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் என்பதை உணர்ந்து இன்று நீங்கள் செயல்பட்டால் நல்லதொரு நன்மை பெறும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
பல நாட்களாக நீங்கள் நினைத்து நடக்காத ஒரு செயல் இன்று உங்கள் முன்னோர்களின் ஆசியால் வெற்றிகரமாக நடக்கும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
பிறரை சந்தோஷத்தில் ஆழ்த்தி நீங்கள் சந்தோசம் காண்பீர்கள் அதன் விளைவாக மன மகிழ்ச்சியும் புகழும் பெறும் நன்நாள் இந்நாள்
11, கும்பம்
பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் நீங்கள் செய்யும் ஒரு செயல் அதிர்ஷ்டவசமாக இன்று உங்களுக்கு நன்மைகளை தரும் நன்நாள் இந்நாள்
12, மீனம்
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார
நட்ச்சத்திரங்கள் : உத்திரம், அஸ்தம்
ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கான உதவிகளை செய்வது பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய சுப
நட்சத்திரம் : ரேவதி
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
ஆதிசிவம் பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here
அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more
உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார்
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ