ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
இன்றைய ராசி பலன்கள் -ஆகஸ்ட் -05/2026- புதன்கிழமை
1, மேஷம்
நம்பக்கூடாதவர்களை நம்பியதன் விளைவாகஇன்று சில இன்னல்களை சந்திக்க வாய்ப்புள்ளது இருந்தாலும் உங்கள் புத்தி கூர்மையால் அனைத்து இன்னல்களில் இருந்தும் வெளிவந்து நல்லதொரு நலம் பெறும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
இன்று மதியம் வரை தேவையில்லாத மனக்குழப்பத்தால் உங்கள் மனம் வருத்தம் அடைய வாய்ப்பு உள்ளது இருந்தாலும் மதியத்திற்குப் பின் உங்களது தெளிவான மனநிலையால் உங்கள் மனம் உற்சாகம் பெறும் நன்நாள் இந்நாள்
3, மிதுனம்
சற்றும் நீங்கள் எதிர்பார்க்காதவாறு நல்லதொரு லாபங்களை பெற வாய்ப்புள்ளது எனவே உங்களுக்கு கிடைக்கவிருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் நல்லதொரு லாபம் பெறும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
நாளை நீங்கள் சந்திக்கப் போகும் வெற்றிக்காக சில சவால்களை இன்று சந்திக்க வாய்ப்புள்ளது எனவே மேலும் உங்கள் திறமையை வளர்த்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி பெறும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
பல நாட்களாக நீங்கள் ஆசைப்பட்டு கிடைக்காத ஒரு பொருள் உங்களது எந்த முயற்சியும் இன்றி அதிர்ஷ்டவசமாகவே இன்று உங்களை வந்தடைய வாய்ப்புள்ளது எதிர்பார்க்காத பரிசுகளை பெறும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
தேவையில்லாத அலைச்சல்களை தவிர்ப்பது மற்றும் தவறான நபர்களுடைய சவகாசத்திலிருந்து விலகுவது உங்களுக்கு நலம் தரும் என்பதை நீங்களே உணரும் நாள் நல்லதொரு தெளிவான மனநிலையை பெறும் நன்நாள் இந்நாள்
7, துலாம்
பிறருக்கு வாக்கு கொடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்படவும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு கடுமையான சவால்களை சந்திக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து செயல்பட்டால் அற்புதமான அனுபவத்தை பெறும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
இன்று உங்களுக்கு இதுவரை நீங்கள் சந்திக்காத புதுவித ஒரு அனுபவத்தை பெற வாய்ப்பு உள்ளது நல்லதொரு அனுபவத்தை பெற்றதன் விளைவாக நல்லதொரு ஞானம் பெறும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
உங்களது சமயோசித புத்தியால் இன்று பல சவால்களை மிக எளிமையாக கடந்து அதில் வெற்றி பெறும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத சிறு கசப்பான நிகழ்வுகளை சந்திக்க வாய்ப்புள்ளது இருந்தாலும் மேன்மை நிறைந்த உங்களது குணமே அனைத்து கசப்பான நிகழ்வுகளையும் இனிப்பான நிகழ்வுகளாக மாற்றி இன்பம் பெற செய்யும் உங்களது குணம் மேலும் மேன்மை பெறும் நன்நாள் இந்நாள்
11, கும்பம்
வாழ்க்கையில் தைரியமாக இருந்தால் அனைத்திலும் வென்று விடலாம் என்பதை உணரும் வண்ணம் இன்று ஒரு நிகழ்வு நடக்கும் அதன் விளைவாக மேலும் உங்கள் மனதைரியம் அதிகரிக்கும் தைரியத்தால் புகழ் பெறும் நன்நாள் இந்நாள்
12, மீனம்
உங்களைப் பற்றிய குறைகளை உங்கள் காது படவே இன்று சிலர் பேச வாய்ப்புள்ளது இருந்தாலும் உங்களது பக்குவம் நிறைந்த குணமே அந்த சூழலில் இருந்து உங்களைக் காக்கும் உங்கள் மனம் நல்லதொரு அனுபவம் பெறும் நன்நாள் இந்நாள்
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : பூரம்,உத்திரம்
பரிகாரம் :ஏழ்மை நிலையில் இருக்கும் அந்தணர்களுக்கு பெருமாள் கோவில் அர்ச்சகர்களுக்கு தேவையான மற்றும் உங்களால் இயன்ற பொருளுதவியை செய்வது மற்றும் கோவில்களில் மரக்கன்றுகள் நடுவது பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய சுப
நட்சத்திரம் : அஸ்வினி
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரச மரத்தடியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று உங்களால் இயன்றால் ஏழு தோப்புக்கரணம் போட்டு அருகம்புல் மாலை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்து ஏழு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது மற்றும் கோவில் யானைகளுக்கு தேவையான உங்களால் இயன்ற உணவுகளை வாங்கி தருவது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
ஆதிசிவம் பவுண்டேஷன் YouTube channel காணொளிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு click here
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் மேலும் படிக்க click here
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது மேலும் படிக்க click here
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here
அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more
உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார்
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ