ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
வளமான வாழ்வை தரும் குரு பெயர்ச்சி பலன்கள் click here...
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது...
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
இன்றைய ராசி பலன்கள் -டிசம்பர் -26/2024- வியாழக்கிழமை
1,மேஷம்
உங்களது திறமையால் மற்றவர்கள் செய்ய தயங்கும் ஒரு செயலை துணிச்சலாக நீங்கள் செய்து அதில் வெற்றியும் பாராட்டுக்களையும் பெறும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
நீங்கள் செய்த தர்மத்தின் பலனாகசற்றும் நீங்கள் எதிர்பார்க்காத நன்மைகள் நடக்கும் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
3, மிதுனம்
உங்களது பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாலும் நேர்மை மிகு உங்களது செயலாலும் சில நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது அதன் பொருட்டு மனநிறைவு பெறும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
இன்று நீங்கள் செய்யப் போகும் புதிய முயற்சிகள் அனைத்தும் இறைவன் அருளாலும் உங்களது பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது அதன் பொருட்டு இனம் புரியாதொரு மன மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
உங்களது மனம் புண்படும்படி நடந்து கொண்டவர்களே அவர்கள் செய்தது தவறு என்று உணர்வார்கள் அதன் பொருட்டு உங்கள் மனம் அமைதி பெறும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை முதுகு வலி மற்றும் மூட்டுகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து கடுமையான வேலைகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு எளிமையான சில யோகப் பயிற்சிகளை மேற்கொண்டால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
7, துலாம்
இறைவன் அருளால் யாராலும் யூகிக்க கூட முடியாத மிகப்பெரிய செயலை செய்து அதில் மாபெரும் வெற்றியும் பாராட்டும் பெறும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
உங்களது புத்தி கூர்மையால் யாராலும் முடிக்க முடியாத சில வேலைகளை இன்று நீங்கள் வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள் அதன் பொருட்டு நல்லதொரு பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
உங்களைப் பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருந்த சிலர் இன்று உங்களது நேர்மை குணத்தை கண்டு முழுமையாக நீங்கள் யார் என்பதை உணர்வார்கள் அதன் பொருட்டு பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
பிரபஞ்ச ரகசியம் ஒன்று உங்களது பிராப்த கர்ம புண்ணிய அடிப்படையில் இன்று உங்களுக்கு தெரிய வரும் அதன் பொருட்டு உங்கள் மனம் ஞானம் பெறும் நன்நாள் இந்நாள்
11, கும்பம்
நீண்ட நாளில் இருந்த மன வருத்தமும் ஒரு குழப்பமும் இன்று விலகுவதால் இனம் புரியாத ஒரு மன மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
12, மீனம்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results benefits regularly...
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் :
பூரட்டாதி,உத்திரட்டாதி
பரிகாரம் :ஏழ்மை நிலையில் உள்ள உங்களது குருமார்கள் மற்றும் உங்களை நல்வழிப்படுத்துபவர்களுக்கு தேவையான மற்றும் உங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்து அவர்களின் ஆசியை பெறுவது இன்று
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய
சுப நட்சத்திரம் : விசாகம்
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகில் உள்ள பழமையான முருகன் கோவிலுக்கு சென்று அங்குள்ள மூலவரை வணங்கிய பின் தக்ஷனா மூர்த்திக்கு ஐந்து நெய் தீபம் ஏற்றி மனம் உருகி வழிபடுவது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .
2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.
3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.
இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள் இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும் மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ...
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம்
ஓம் நமசிவாய சிவ சிவ
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ