ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
வளமான வாழ்வை தரும் குரு பெயர்ச்சி பலன்கள் click here...
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது...
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
இன்றைய ராசி பலன்கள் -நவம்பர் -7/2024- வியாழக்கிழமை
1,மேஷம்
உங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு செயலை செய்து அதில் நல்லதொரு அனுபவமும் பாராட்டும் பெறும் நன்நாள் இந்நாள்
2,ரிஷபம்
உங்களுக்கு மிகவும் தேவையான ஒரு பொருள் தொலைந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை உணர்ந்து மிகுந்த கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இருந்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
3,மிதுனம்
4,கடகம்
உங்களது இலக்கை அடைவதற்கான முயற்சியில் முன்பின் தெரியாத சில நபர்களின் உதவி கிடைக்க வாய்ப்புள்ளது அதன் பொருட்டு இனம் புரியாததொரு பூரிப்பு பெறும் நன்நாள் இந்நாள்
5,சிம்மம்
இனம் புரியாததொரு மன வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே உங்களைச் சார்ந்தவர்கள் யாரையும் குறை கூறாமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது என்பதை உணர்ந்து செயல்பட்டால் உங்கள் மனம் அமைதி பெறும் நன்நாள் இந்நாள்
6,கன்னி
உங்களது அவசர புத்தியால் தேவையில்லாத சில மன வருத்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து விழிப்புணர்வுடனும் நிதானத்துடனும் செயல்பட்டால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
7,துலாம்
உங்கள் அன்பிற்குரியவர்களின் மனதை சந்தோஷப்படுத்துவதற்காக சில சவால்களை சந்திக்க வாய்ப்புள்ளது இருப்பினும் இறைவனின் அருளோடும் உங்களது அறிவின் பலத்தாலும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் உங்களுக்கும் மிகுந்த நன்மைகள் நடக்கும் நன்நாள் இந்நாள்
8,விருச்சிகம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைகண் எரிச்சல் தலைவலி போன்ற சிறு சிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து உடலை குளிர்ச்சியூட்டும் உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு ஓய்வெடுப்பது உங்கள் உடலை நலம் பெற செய்யும் நன்நாள் இந்நாள்
9,தனுசு
உங்களது ஈகை குணத்தால் உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் ஒரு செயல் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்காத ஒரு புண்ணியங்களை சேர்க்கும் அதன் பொருட்டு உங்கள் மனம் பெருமிதம் பெறும் நன்நாள் இந்நாள்
10,மகரம்
ஆன்மீக சிந்தனை அதிகரிக்க வாய்ப்புள்ளது அதன் பொருட்டு உங்களது ஆழ்மனம் இதுவரை நீங்கள் உணராததொருமன அமைதி பெறும் நன்நாள் இந்நாள்
11,கும்பம்
உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை என்பதை உணர்ந்து செயல்பட்டால் உங்களைச் சார்ந்தவர்களும் நீங்களும் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
12,மீனம்
உங்களது வாகனங்கள் பழுதாக வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து முன்கூட்டியே உங்களது வாகனத்தை பராமரித்து வைத்துக் கொள்வது வாகனங்களால் வரும் செலவுகளை குறைக்கும் அதன் பொருட்டு உங்களது சேமிப்பு கரைவதை தடுக்கும் உங்கள் மனம் நிம்மதி பெறும் நன்நாள் இந்நாள் 
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results benefits regularly...
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் :
மிருகசீரிடம்
பரிகாரம் :உங்களுக்கு மிக நெருக்கமான உறவு யாரேனும் சில கருத்து வேறுபாடை காரணமாக கொண்டு விலகி இருந்தால் அவர்கள் மீதான கோவங்களை விட்டு நீங்களாகவே அவர்களிடம் போய் உங்களது பரிபூரணமான அன்பை காட்டுங்கள் அதன் பொருட்டு நல்லதொரு மேன்மைமிகு அனுபவம்கிடைக்கும் மற்றும் உங்களது கர்மவினையும் விலகும் அதன் பொருட்டு இன்று
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய
சுப நட்சத்திரம் : உத்திராடம்
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .
2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.
3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.
இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள் இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும் மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ...
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம்
ஓம் நமசிவாய சிவ சிவ
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ