Today Zodiac Results இன்றைய ராசி பலன்கள் ஆகஸ்ட் -11/2024-ஞாயிற்றுக்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 

வளமான வாழ்வை தரும் குரு பெயர்ச்சி பலன்கள் click here...

தினராசி பலன் பற்றிய விளக்கம் 

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது... 

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...

Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...

இன்றைய ராசி பலன்கள் -ஆகஸ்ட் -11/2024- ஞாயிற்றுக்கிழமை 

1,மேஷம் 
உங்கள் மனம் வருத்தப்படும் வகையில் உங்கள் நம்பிக்கை கூறியவர்கள் சில செயல்களை செய்வார்கள்  அதன் பொருட்டு வெளியில் சொல்ல முடியாத மனவேதனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து அனைவரிடமும் சிறு இடைவெளியுடன் பழகுவது நல்லதொரு பக்குவம் பெறும்    நன்நாள் இந்நாள் 

2,ரிஷபம் 
சில தர்ம சங்கட சூழ்நிலைகளை சந்திக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து பிறரிடம் வாக்கு கொடுப்பதற்கு முன் பலமுறை சிந்தித்து செயல்பட்டால் நலம்  பெறும்  நன்நாள் இந்நாள்  

3,மிதுனம் 
உங்களது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நீங்கள் எதிர்பார்த்தபடியே நடக்க வாய்ப்பு உள்ளது அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள் 

4,கடகம் 
உங்களை அறியாமல் செய்த தவறால் சில நல்ல உறவுகளை இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து நிதானத்துடனும் பொறுமையுடனும் செயல்பட்டால் நலம்  பெறும் 
நன்நாள் இந்நாள் 

5,சிம்மம்
நீங்கள் செய்யும் ஒரு நற்செயலானது உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் நல்வழிப்படுத்தும்.அதன் விளைவாக நல்லதொரு மனநிறைவை பெறும் நன்நாள் இந்நாள்

6,கன்னி 
சகோதரத்துவத்துடன் பழகும் சகோதர சகோதரிகளுக்கு  உங்கள் மீதான அன்பு இன்று  அதிகமாகும். அதன் பொருட்டு இனம் புரியாததொரு மன மகிழ்ச்சி  பெறும் நன்நாள் இந்நாள் 

7,துலாம் 
தேவையில்லாத சில மனக்குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து அனைத்து செயல்களிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் இதுவரை நீங்கள் காணாததொரு மாபெரும் வெற்றியை பெறும்  நன்நாள் இந்நாள்

8,விருச்சிகம் 
உங்களது ஞாபக மறதியால் இன்று சில சிரமங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து நீங்கள் ஆற்றக்கூடிய அனைத்து செயல்களையும் நிதானத்துடன் முன்கூட்டியே முடிவெடுத்தபின் செயல்படுவது நல்லதொரு விளைவுகளை உருவாக்கி நலம்  பெறும்   நன்நாள் இந்நாள்

9,தனுசு 
 உங்களது பொறுப்புகளை உணர்ந்து இன்று நீங்கள் செயல்படுவதன் காரணத்தால் உங்களைச் சார்ந்தவர்கள் அனைவரிடமும் பாராட்டுகளையும் பெருமையும் பெறும்  நன்நாள் இந்நாள்

10,மகரம் 
நீங்கள் ஆற்றும் அனைத்து செயல்களிலும் இதுவரை காணாததொரு அனுபவத்தையும் சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத சில நன்மைகளையும்  பெறும் நன்நாள் இந்நாள் 

11,கும்பம் 
உங்களது முன்னோர்களின் ஆசியாலும் அவர்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாலும் இதுவரை காணாததொரு நன்மைகளை காண்பீர்கள் அதன் பொருட்டு இனம் புரியாததொரு மகிழ்ச்சி  பெறும்  நன்நாள் இந்நாள்

12,மீனம் 
தேவையில்லாத சில வீண் விரயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை உணர்ந்து மிகுந்த கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இருந்தால் விரயத்தை தவிர்த்து நன்மை   பெறும்  நன்நாள் இந்நாள்

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில் இணையவும் ...

Join this group to get your today zodiac results  benefits regularly...

ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : 
பூரட்டாதி  
 
பரிகாரம் :
கோவில்களில் நடக்கும் அன்னதானத்திற்கு உங்களால் இயன்ற அவர்களுக்கு தேவையான பொருள் உதவிகளை செய்வது, பசுக்களுக்கு உணவு தருவது 
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும் 

இன்றைய 
சுப நட்சத்திரம் : சுவாதி 

சுவாதி  
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களது குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது உங்களது முன்னோர்களை மனதார நினைத்து  மனம் உருகி வழிபடுவது   இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்


அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.

1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .

2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.

3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.

இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு 
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள்  இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும்  மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ... 
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம் 
ஓம் நமசிவாய சிவ சிவ

உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ