Click here to continue today's zodiac results in English
ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் மேலும் படிக்க read more
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது...
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
இன்றைய ராசி பலன்கள் - ஏப்ரல் -12/2024-வெள்ளிக்கிழமை
Click here to continue today's zodiac results in English
1,மேஷம்
தேவையில்லாத மனக்குழப்பங்களால்வருத்தம் அடைவதற்கு வாய்ப்பு உள்ளதுஎன்பதை உங்களது தன்னம்பிக்கையை அதிகரித்துஉங்களது மனநிலையை மிகவும் தெளிவாக வைத்துக் கொண்டால்நிச்சயம் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
உங்களைச் சார்ந்தவர்களின் நலனுக்காக நீங்கள் செய்த உதவியை பெற்றவர்கள் உங்களை வாழ்த்துவார்கள் அதன் பொருட்டு நல்லதொரு மன நிறைவை பெறும் நன்நாள் இந்நாள்
3, மிதுனம்
தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து உங்களது முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே மனதில் வைத்து இன்று உங்களது செயல்கள் இருந்தால் நீங்கள் எதிர்பார்த்த நல்லதொரு லாபத்தையும் நன்மையும் பெறும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
உங்களது முன்னேற்றத்திற்காக இன்று நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும் ஆரம்பத்தில் சில தடைகளை சந்தித்தாலும் இறுதியில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறுவீர்கள் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
ஞாபக மறதிகள் இன்று உங்களுக்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து உங்களது பொருட்களை மிகவும் கவனமாக வைத்துக் கொண்டால் இன்று மனக்குழப்பம் இல்லாமல் வாழலாம் அதன் பொருட்டு நல்லதொரு மன மேன்மை பெறும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
தேவையில்லாத சில செயல்களை செய்ததன் விளைவாக தேவையில்லாத சில துன்பங்களை அனுபவிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து இன்று நீங்கள் ஆற்றும் அனைத்து செயல்களிலும் சிறு இடைவெளி விட்டும், மிகுந்த கவனத்துடனும் செயல்பட்டால் நல்லதொரு நலம் பெறும் நன்நாள் இந்நாள்
7, துலாம்
அனைவரிடத்திலும் நீங்கள் காட்டும் கருணையானது உங்களுக்குள் இருக்கும் இறையாற்றலை உங்களைச் சார்ந்தவர்கள் அனைவரின் முன்னும் வெளிப்படுத்த செய்யும் அதன் பொருட்டு இனம் புரியாதொரு பேரின்ப நிலையை பெரும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
இனம் புரியாததொரு மனம் மகிழ்ச்சியை உணர்வீர்கள் அதன் பொருட்டு நீங்கள் எதிர்பார்க்காததொரு நல்ல மன நிறைவை பெறும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
என்றோ ஒரு நாள் நீங்கள் செய்த புண்ணியத்தின் பலனால் இன்று உங்களுக்கு வரவிருக்கும் ஒரு துன்பத்திலிருந்து தப்பித்து நீங்கள் செய்த புண்ணியத்தின் வலிமையை உணர்வீர்கள் அதன் பொருட்டு உங்கள் மனம் ஆச்சரியம் பெறும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
தேவையில்லாத வீண் பழி சொற்களை உங்களைச் சார்ந்தவர்கள் உங்கள் மீது போடுவதற்கு வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து மிகுந்த விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருந்தால் நல்லதொரு மன நிம்மதி பெறும்
11, கும்பம்
உங்களுக்கு வரவிருக்கும் ஒரு நன்மையை உங்களது அன்பிற்குரியவர்கள் தட்டிப் பறிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து உங்களது முன்னேற்றத்தைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் பகிராமல் இருந்தால் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் நன்நாள் இன்நாள்
12, மீனம்
உங்களைச் சார்ந்தவர்களுக்கு உங்களது அருமை புரிய வரும் அதன் பொருட்டு அனைவரிடத்திலும் உங்களது புகழ் கூடுவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் நல்லதொரு புகழ் பெறும் நன்நாள் இந்நாள்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results benefits regularly...
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் :
அஸ்தம்
பரிகாரம் : உங்களது அன்னையின் ஆசைகளை நிறைவேற்றுவது மற்றும் உங்களது அன்னையின் வயதுடையவர்களுக்கு அவர்களுக்கு தேவையான மற்றும் உங்களால் இயன்ற உதவிகளை செய்து உங்களது அன்னை அல்லது உங்கள் அன்னையின் வயதுடையவர்களிடம் ஆசி பெறுவது இன்றைய நாள்
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய
சுப நட்சத்திரம் : கிருத்திகை
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று காலை எழுந்தவுடன் சூரிய உதயத்தை தரிசித்து உங்களது பிரார்த்தனைகளை சூரிய பகவானிடம் மனம் உருகி சமர்ப்பிப்பது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .
2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.
3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.
இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள் இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும் மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ...
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம்
ஓம் நமசிவாய சிவ சிவ
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி
வாழ்க வளமுடன்