Click here to continue today's zodiac results in English
ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் மேலும் படிக்க read more
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது...
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
இன்றைய ராசி பலன்கள் - ஏப்ரல் -10/2024-புதன்கிழமை
Click here to continue today's zodiac results in English
1,மேஷம்
உங்கள் அன்பிற்குரியவர்கள் உங்களுக்கு சில பரிசுகளை வாங்கித் தருவதற்கான வாய்ப்பு உள்ளது அதன் விளைவாக உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
உங்களது நெருங்கிய உறவுகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து தேவையில்லாத உரையாடல்களை தவிர்த்தால் உங்கள் மனம் அமைதி பெறும் நன்நாள் இந்நாள்
3, மிதுனம்
உங்களது புத்தி கூர்மையால் இன்று நீங்கள் ஆற்றும் ஒரு செயலானது உங்களுக்கு நல்லதொரு வெற்றியையும் பாராட்டும் பெற்று தரும் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
சளி தொந்தரவு மற்றும் தலைவலி போன்ற உபாதைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து குளிர்ந்த உணவுப் பொருட்களை தவிர்த்து ஆரோக்கிய மிகுந்த உணவுப் பொருட்களை உட்கொண்டு எளிமையான வேலைகளை மட்டும் செய்து போதிய அளவு ஓய்வெடுத்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
உங்களது நெருங்கிய உறவுகளிடம் வாக்கு பிரயோகத்தில் மிகுந்த கவனம் தேவை என்பதை உணர்ந்து நீங்கள் செயல்பட்டால் உங்கள் மனம் அமைதி பெறும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
நீங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணிய பலனானால் இதுவரை நீங்கள் எதிர்பார்க்காத ஒரு நன்மையை பெறும் நன்நாள் இந்நாள்
7, துலாம்
உங்களைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் உங்களது அருமை என்னவென்று புரிய வைக்கும் நாள் அதன் பொருட்டு உங்களது பெருமை கூடும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
உங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இன்று நீங்கள் ஆற்றும் ஒரு செயலானது நீங்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு நன்மைகளை தரும் என்பதை உணர்வு பூர்வமாக உணர்ந்ததன் விளைவாக உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
தேவையில்லாத வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது என்பதை உணர்ந்து நிதானத்துடன் செயல்பட்டால் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளையும் நல்லதொரு மனநிம்மதியும் பெறும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
கடந்த சில நாட்களாகவே வெளியில் சொல்ல முடியாத சில மன வருத்தத்தில் இருந்த நீங்கள் உங்களது இஷ்ட தெய்வத்தின் அருளாலும் நீங்கள் செய்த பிராப்த்த புண்ணியத்தின் பலனாலும் நீங்கள் எதிர்பாராத சில நன்மைகளைக் காண்பீர்கள் அதன் பொருட்டு நன்மை பெறும்
11, கும்பம்
உங்கள் அன்பிற்குரியவர்களின் நலனுக்காக சில சவால்களை எதிர்கொண்டு அதில் உங்கள் அன்பிற்குரியவர்களும் நீங்களும் நன்மை காணும் நாள் அதன் பொருட்டு மகிழ்ச்சி பெறும் நன்நாள் இன்நாள்
12, மீனம்
உங்களது முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் பலனாக இன்று சில நிகழ்வுகள் உங்களது எதிர்காலம் நல்லபடியாக இருப்பதற்கு உதவியாக இருக்கும் அதன் பொருட்டு இனம் புரியாதொரு மனநிறைவு நிறைந்த மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...
click here...
Join this group to get your today zodiac results benefits regularly...
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் :
பூரம்
ஆதரவு இல்லாமல் தவிக்கும் முதியோர்களுக்கு உணவு தண்ணீர் தருவது மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் மருந்துகளையும் தருவது
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய
சுப நட்சத்திரம் : பரணி
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகிலுள்ள பழமை வாய்ந்த முருகன் கோவிலுக்கு சென்று ஆறு இளஞ்சிவப்பு தாமரை வாங்கி தந்து அர்ச்சனை செய்து மனம் உருகி வழிபடுவது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .
2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.
3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.
இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள் இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும் மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ...
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம்
ஓம் நமசிவாய சிவ சிவ
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
click here...உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி
வாழ்க வளமுடன்