இன்றைய ராசி பலன்கள் மற்றும் குரோதி வருடத்திற்கான ஆண்டு பலன்கள் - ஏப்ரல் -14/2024-ஞாயிற்றுக்கிழமை


Click here to continue today's zodiac results in English

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம்
மேலும் படிக்க  read more ...

தினராசி பலன் பற்றிய விளக்கம் 

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது... 

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...

Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...

இன்றைய ராசி பலன்கள் மற்றும் குரோதி வருடத்திற்கான ஆண்டு பலன்கள்  - ஏப்ரல் -14/2024-ஞாயிற்றுக்கிழமை  

Click here to continue today's zodiac results in English

1,மேஷம் 
உங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் இன்று ஒரு செயலை செய்வீர்கள் அதன் பொருட்டு உங்களைச் சார்ந்தவர்கள் அனைவரிடமும் பாராட்டு  பெறும்  நன்நாள் இந்நாள்

இனிதே பிறந்திருக்கும் குரோதி ஆண்டு  நிறைவு பெறுவதற்குள்  ஏழை எளியவர்களுக்கு நீங்கள் காட்டும் கருணையானது மேலும் அதிகமாகும்  அதன் பொருட்டு இந்த ஆண்டு நிறைவுபெறுவதற்குள் பெயர் புகழ் மற்றும்  நல்லதொரு சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர்கள் 
நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் : உத்தரகோசமங்கை சிவபெருமான் மரகத நடராஜர்.

2, ரிஷபம் 
இனம் புரியாததொரு மனமகிழ்ச்சியை உணர்வீர்கள் நன்நாள் இந்நாள்

இனிதே பிறந்திருக்கும் குரோதி ஆண்டு  நிறைவு பெறுவதற்குள் 
கவலைகள் அனைத்தும் ஒழிந்து மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும்  அதன் பொருட்டு இந்த ஆண்டு நிறைவுபெறுவதற்குள் பேரானந்தத்தை உணர்வீர்கள் 
நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் : லட்சுமி நரசிம்மர் மற்றும் யோக நரசிம்மர்.

3, மிதுனம்
ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும் அதன் விளைவாக இறைவனின் முழு அருளையும் பெறுவீர்கள் மற்றும் சகல சௌபாக்கியங்களையும் பெற்று உங்கள் மனம் மகிழ்ச்சி  பெறும்  நன்நாள் இந்நாள்

இனிதே பிறந்திருக்கும் குரோதி ஆண்டு  நிறைவு பெறுவதற்குள் உங்களது புன்னகை அதிகரிக்கும், பொன் நகைகளும் சேரும்   அதன் பொருட்டு இந்த ஆண்டு நல்லதொரு மனநிறைவும் தங்கப் பொருள்கள் சேர்க்கையும் அதிகரிக்கும் 
நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் : வாராகி அம்மன் மகாலட்சுமி தேவி.

4, கடகம்
உங்களது துணிச்சல் மிகு செயல்களால் இன்று ஒரு செயலை செய்து அதில் மாபெரும் வெற்றி  பெறும் நன்நாள் இந்நாள் 

இனிதே பிறந்திருக்கும் குரோதி ஆண்டு  நிறைவு பெறுவதற்குள் உங்கள் கடன்கள் அடையும் வருமானம் அதிகரிக்கும்  அதன் பொருட்டு இந்த ஆண்டு நல்லதொரு மனநிம்மதி  பெறுவீர்கள் 
நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் : கால பைரவர் மற்றும் காவல் தெய்வங்கள்.

5, சிம்மம்
உங்களது அன்பிற்குரியவர்களின் அன்பு உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் அதன் பொருட்டு உங்கள் மனம் நல்லதொரு ஆனந்தம்  பெறும்  நன்நாள் இந்நாள்

இனிதே பிறந்திருக்கும் குரோதி ஆண்டு  நிறைவு பெறுவதற்குள் பொருளாதார நிலையில் நல்லதொரு முன்னேற்றத்தை பெறுவீர்கள் அதன் பொருட்டு இந்த ஆண்டு நல்லதொரு பொருளாதார முன்னேற்றத்தை காண்பீர்கள் 
நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் :  பத்ரகாளி அம்மன்.

6, கன்னி
நீங்கள் செய்த புண்ணியத்தின் பலன்களால் உங்களைச் சார்ந்தவர்களும் நீங்களும் நல்லதொரு நன்மை  பெறும்  நன்நாள் இந்நாள் 

இனிதே பிறந்திருக்கும் குரோதி ஆண்டு  நிறைவு பெறுவதற்குள் 
உங்களது குலதெய்வத்தின் அருளால் உங்களுக்கு ஞானம் அதிகரிக்கும்  அதன் பொருட்டு இந்த ஆண்டு நல்லதொரு மன தெளிவும் ஞானமும் பெற்று அதன் விளைவாக சகல சௌபாக்கியங்களையும்  பெறுவீர்கள்  
நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் : பள்ளிகொண்ட பெருமாள் ஸ்ரீரங்கநாதர்.

7, துலாம்
உங்களைச் சார்ந்தவர்கள் அனைவரிடத்திலும் நல்லதொரு பாராட்டு பெறும்  நன்நாள் இந்நாள் .

இனிதே பிறந்திருக்கும் குரோதி ஆண்டு  நிறைவு பெறுவதற்குள் நீங்கள் சிகரம் தொடும் அளவிற்கு புகழ் பெறுவீர்கள்  அதன் பொருட்டு இந்த ஆண்டு நல்லதொரு லாபம் மற்றும் உச்சம் தொடும் புகழ் பெறுவீர்கள்
நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் லட்சுமி நாராயணர் மற்றும் விஷ்ணு துர்க்கை.

8, விருச்சிகம் 
இனம் புரியாத ஒரு மனமகிழ்ச்சியை உணர்வீர்கள் அதன் பொருட்டு உங்களால் யூகிக்க முடியாத மனநிறைவை  பெறும்  நன்நாள் இந்நாள் .

இனிதே பிறந்திருக்கும் குரோதி ஆண்டு  நிறைவு பெறுவதற்குள்சற்றும் நீங்கள் எதிர்பார்க்காததொரு பரிசுகளை பெறுவீர்கள் அதன் பொருட்டு இந்த ஆண்டு நிறைவு பெருவதற்குள் நீங்கள் எதிர்பார்க்காத பரிசுகளை பெறுவீர்கள் .
நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் பழமுதிர்ச்சோலை முருகப்பெருமான்..


9, தனுசு 
தேவையில்லாத வீண் அலைச்சல்களை தவிர்த்து நேரம் கிடைக்கும் பொழுது சற்று ஓய்வெடுத்த பின் உங்களது வெற்றிக்கான பாதையில் பயணித்தால் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறுவீர்கள்நன்நாள் இந்நாள் .

இனிதே பிறந்திருக்கும் குரோதி ஆண்டு  நிறைவு பெறுவதற்குள் உங்களது உடல் ஆரோக்கியத்தில் நல்லதொரு நலம் பெருவீர்கள் அதன் பொருட்டு இந்த ஆண்டு நிறைவு பெறுவதற்குள் உங்களது உடல் ஆரோக்கியம் மிகவும் மேன்மை பெறும் 

நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் : மலை மீது அமர்ந்துள்ள சிவபெருமான் (சிவலிங்கம் ).

10, மகரம்
சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத சில அனுபவங்களை பெறுவீர்கள் அதன் விளைவாக நீங்கள் எதிர்பார்க்காத ஒரு நல்ல முன்னேற்றத்தை  பெறும் 
நன்நாள் இந்நாள் 

இனிதே பிறந்திருக்கும் குரோதி ஆண்டு  நிறைவு பெறுவதற்குள் நிலம் வீடு வாகனம் வாங்குவீர்கள் அதன் பொருட்டு இந்த ஆண்டு நிறைவு பெறுவதற்குள் உங்கள் வாழ்வில் நல்லதொரு முன்னேற்றத்தை காண்பீர்கள் 
நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் : விநாயகர்.

11, கும்பம் 
நீண்ட நாள் நிறைவேறாதிருந்த உங்களது ஆசைகள் உங்களது சமயோசித  புத்தி கூர்மையால் இன்று நிறைவேறும் அதன் பொருட்டு நல்லதொரு மன மகிழ்ச்சி  பெறும் நன்நாள் இன்நாள்.

இனிதே பிறந்திருக்கும் குரோதி ஆண்டு  நிறைவு பெறுவதற்குள் உங்கள் வாழ்வில் சற்றும் நீங்கள் எதிர்பார்க்காதவாறு நல்லதொரு முன்னேற்றத்தை காண்பீர்கள் அதன் பொருட்டு இந்த ஆண்டு நிறைவுபெறுவதற்குள் நல்லதொரு மேன்மை பெறுவீர்கள்.
நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர்.

12, மீனம் 
உங்களது பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனால் இதுவரை காணாததொரு நன்மையை காண்பீர்கள் அதன் பொருட்டு நல்லதொரு மன நிறைவு  பெறும் நன்நாள் இந்நாள்.

இனிதே பிறந்திருக்கும் குரோதி ஆண்டு  நிறைவு பெறுவதற்குள் நீங்கள் எதிர்பார்க்காதவாறு பொருள் சேர்க்கைகள் சேரும் அதன் பொருட்டு இந்த ஆண்டு நல்லதொரு முன்னேற்றம் காண்பீர்கள் 

நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் : தக்ஷிணாமூர்த்தி.

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில் இணையவும் ...
click here ...

Join this group to get your today zodiac results  benefits regularly...

ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : 
சுவாதி 
 
பரிகாரம் :ஆதரவின்றி ஏழ்மை நிலையில் இருக்கும் முதியவர்களுக்கு உணவு, தண்ணீர் தானம் தருவது மற்றும்  அவர்களுக்குத் தேவையான மற்றும்  உங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்வது 
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும் 

இன்றைய 
சுப நட்சத்திரம் : திருவாதிரை 

திருவாதிரை  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகிலுள்ள பழமையான சிவன் கோவிலுக்கு சென்று அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பின் பச்சரிசி மாவை எறும்புகளுக்கு உணவாக தருவது மற்றும் 5 நெய் தீபம் ஏற்றி மனம் உருகி வழிபடுவது  இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.

1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .

2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.

3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.

இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு 
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள்  இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும்  மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ... 
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம் 
ஓம் நமசிவாய சிவ சிவ

உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.

உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ