ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
வளமான வாழ்வை தரும் குரு பெயர்ச்சி பலன்கள் click here...
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது...
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
இன்றைய ராசி பலன்கள் -அக்டோபர் -19/2025- ஞாயிற்றுக்கிழமை
1,மேஷம்
உங்கள் இருதயத்தால் தாங்க முடியாத சில செய்திகளை கேட்க வாய்ப்புள்ளது இருந்தாலும் உங்கள் மன தைரியத்தால் அனைத்து சூழ்நிலைகளையும் நல்லதாகவே நீங்கள் மாற்றுவீர்கள் நல்லதொரு அனுபவம் பெறும் நன்நாள் இந்நாள்.
2,ரிஷபம்
நல்லவர் போல் நடித்து உங்களுடன் பயணிக்கும் சிலரின் உண்மை முகம் தெரியவரும் இருந்தாலும் முடிவில் உங்களோடு உண்மையாக பயணிப்பவர்களை கண்டறிவதால் நல்லதொரு மனத் தெளிவை பெறும் நன்நாள் இந்நாள்.
3,மிதுனம்
உங்கள் குடும்பத்தினர் இன்று உங்களுக்கு ஒரு நல்லதொரு அனுபவத்தை பரிசளிப்பார்கள் நல்லதொரு அனுபவத்தையே பரிசாய் பெறும் நன்நாள் இந்நாள்.
4,கடகம்
இனம் புரியாத பயமும் மனக்குழப்பமும் ஏற்பட வாய்ப்புள்ளது முன்பொருநாள் கடந்து வந்த அனுபவத்தின் வலிமையோடு உங்களுக்குள் இருக்கும் அனைத்து குழப்பங்களையும் நீங்களே தீர்த்துக் கொள்ளும் நாள் நீங்கள் பெற்ற அனுபவமே உங்களுக்கு நன்மை தரும் நன்நாள் இந்நாள்.
5,சிம்மம்
உங்களுக்குத் தெரியாத விஷயங்களில் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது இன்று உங்களுக்கு மேலும் நலம் சேர்க்கும் என்பதை உணர்ந்ததன் விளைவாக இன்று நீங்கள் மிகவும் நிதானத்துடன் இருப்பீர்கள் நலம் பெறும் நன்நாள் இந்நாள்.
6,கன்னி
உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஆரம்பத்தில் நடக்காதது போல் தெரியும் உங்களது முயற்சியால் உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நீங்களே நிறைவேற்றி நல்லதொரு மனநிறைவை பெறும் நன்நாள் இந்நாள்.
7,துலாம்
உங்களது உறுதியான மனநிலையால் எத்தகைய சவால்களையும் சந்திக்க முடியும் என்பதை நீங்களே உணரும் நாள் அதன் பொருட்டு மேலும் உங்கள் மனம் உறுதி பெறும் நன்நாள் இந்நாள்.
8,விருச்சிகம்
உங்களுக்கு வரவிருக்கும் நன்மை ஒன்றை நீங்கள் முன்கூட்டியே உணர்ந்ததன் விளைவாக மிகவும் மகிழ்ச்சியான மனநிலையை பெறும் நன்நாள் இந்நாள்.
9,தனுசு
உங்களுக்கு மிக நெருக்கமான ஒரு நபரால் இன்று நீங்கள் சில இன்னல்களை சந்திக்க வாய்ப்புள்ளது எனவே அனைவரிடத்திலும் எச்சரிக்கையாக இருப்பது உங்களை நலம் பெற செய்யும் நன்நாள் இந்நாள்.
10,மகரம்
உங்கள் நண்பர்களுக்கு மிகவும் தேவையான ஒரு உதவியை நீங்களே உணர்ந்து செய்வீர்கள் அதன் விளைவாக உங்கள் நண்பர்களின் மனதில் மிக உயர்ந்த இடத்தை பெறும் நன்நாள் இந்நாள்.
11,கும்பம்
வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் முன் யோசனை இல்லாமல் வாக்குக் கொடுப்பதையும் தவிர்க்கவும் உங்கள் நிதானமே உங்கள் வெற்றிக்கு வழி வகுக்கும் நல்லதொரு வெற்றி பெறும் நன்நாள் இந்நாள்.
12,மீனம்
நீண்ட நாள் நீங்கள் எதிர்பார்த்த ஒரு நன்மை இன்று உங்கள் குலதெய்வத்தின் அருளால் உங்களுக்கு கிடைக்கும் அதனால் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்.

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results benefits regularly...
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : அவிட்டம்,சதயம்
பரிகாரம் :துறவரத்தில் இருப்பவர்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்த ஞானிகளுக்கு தேவையான மற்றும் உங்களால் இயன்ற உதவியை செய்வது மற்றும் உங்கள் முன்னோர்களை மனதில் நினைத்துக் கொண்டு முதியவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வாங்கி தருவது பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்.
இன்றைய
சுப நட்சத்திரம் : உத்திரம்
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .
2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.
3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.
இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள் இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும் மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ...
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம்
ஓம் நமசிவாய சிவ சிவ
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
உங்கள் காலக்கணிதர் ஆதிகுரு அய்யனார் யோகி
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ