இன்றைய ராசி பலன்கள் ஆகஸ்ட் -9/2025-சனிக்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 



அபிராமி தாயாரின் அருளால் அமாவாசையும் பௌர்ணமியான பக்தி நிறைந்த வரலாறு read more


தினராசி பலன் பற்றிய விளக்கம் 

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது... 

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...

Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...


ஆதி சிவம் பவுண்டேஷன் நடத்தும் ஆதிசிவ யோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள் மேலும் படிக்க click here 

இன்றைய ராசி பலன்கள் -ஆகஸ்ட் -9/2025- சனிக்கிழமை  

1,மேஷம் 
நீங்கள் இன்று மிகப்பெரிய சாதனையாளராக ஜொலிப்பீர்கள் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள் அதனால் உங்கள் மனம் மிகவும் பெருமிதம் அடையும்  நன்நாள் இந்நாள்

2,ரிஷபம் 
பல நாள் நீங்கள் எதிர்பார்த்த ஒரு நன்மை உங்கள் மாபெரும் முயற்சியால் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது  உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இன்று நீங்கள் மிகப்பெரும் நன்மையை பெறும்  நன்நாள் இந்நாள்

3,மிதுனம் 
வாக்கு பிரயோகங்களிலும் வாகனங்களில் செல்கையிலும்  மிகுந்த கவனம் தேவை மதியம் வரை சிறு சிறு மனக்குழப்பங்கள் நிலவும் மதியத்திற்குப் பின் இன்று நடக்கும் அனைத்தும் உங்களுக்கு நன்மையாகவே இருக்கும்  நன்நாள் இந்நாள்

4,கடகம் 
உங்கள் நண்பர்களால் இன்று உங்களுக்கு ஆதாயம் உண்டு மேலும் உங்கள் முன்னேற்றத்திற்கான ஒரு புதிய செயலை தொடங்குவீர்கள் அதனால் உங்கள் மனம் மகிழும்  நன்நாள் இந்நாள் 

5,சிம்மம் 
உங்கள் குடும்பத்தினர் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை தேவை கொடுத்த வாக்கை சில தடைகளை தாண்டி நிறைவேற்றி முடிப்பீர்கள் அதனால் உங்கள் மனம் பெருமிதம் அடையும் நன்நாள் இந்நாள்

6,கன்னி 
உங்கள் தைரிய வீரியத்தால் துணிச்சலாக மேற்கொள்ளும் ஒரு செயலில் நீங்கள் எதிர்பார்த்ததை விட ஒரு நல்ல வெற்றி கிடைக்கும் அதனால் உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும்  நன்நாள் இந்நாள் 

7,துலாம் 
தாய் சொல்லை தட்டாமல் நடப்பது இன்று உங்களுக்கு வரவிருக்கும் ஒரு துன்பத்திலிருந்து உங்களை காக்கும் அதனால் நன்மை பெறும் நன்நாள் இந்நாள் 

8,விருச்சிகம் 
உங்கள் அன்பிற்குரியவர்களால்  இன்று நீங்கள் பாராட்டப்படுவீர்கள் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழும்  நன்நாள் இந்நாள் 

9,தனுசு 
அடி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் இன்று நீங்கள் சிரமப்பட வாய்ப்புள்ளது தேவையில்லாத அலைச்சல்களைத் தவிர்த்து குளிர்ச்சி நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொண்டால் உடல் நலத்துடன் நீங்கள் நலம் பெறும்   நன்நாள் இந்நாள் 

10,மகரம் 
உங்களது தகப்பனார் வழியில் இருந்து சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு உதவி கிடைக்கும் அதனால் இதுவரை சவாலாக இருந்த ஒரு செயலை எளிமையாக நடத்தி முடிப்பீர்கள் நன்மை காணுவீர்கள் நன்மை பெறும்  நன்நாள் இந்நாள்

11,கும்பம் 
வெகு நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நன்மை உங்களது பெறும் முயற்சியால் இன்று உங்களுக்கு கிடைக்கும் உங்கள் மனம் பூரிப்படையும்  நன்நாள் இன்நாள்

12,மீனம் 
நல்ல லாபம் ஒன்றைக் காணும் நாள் மேலும் பல நாள் இருந்த உடல் தொந்தரவுகள் சரியாகும் அதனால் உங்கள் மனம் ஆனந்தம் பெறும்  நன்நாள் இந்நாள் 

அடியேன் கணித்த  2025 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்களை மேலும் படிக்க read more 

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில் இணையவும் ...

Join this group to get your today zodiac results  benefits regularly...

ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : புனர்பூசம் ,பூசம்  
 
பரிகாரம் :
அருகிலுள்ள ஜீவசமாதி ஆலயங்களில் நடக்கும் அன்னதானத்திற்கு உங்களால் இயன்ற மற்றும் அவர்களுக்கு தேவையான பொருள் உதவியை 
செய்வது  பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும் 

இன்றைய 
சுப நட்சத்திரம் : திருவோணம் 

திருவோணம்
  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகில் உள்ள பழமையான சிவ ஆலயங்களுக்கு சென்று அங்குள்ள தக்ஷனா மூர்த்திக்கு இரண்டு நெய் விளக்கு ஏற்றி வழிபடுவது மற்றும் உங்களது குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டால்  இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்


அடியேன் கணித்த  2025 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்களை மேலும் படிக்க read more 

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.

1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .

2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.

3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.

இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு 
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள்  இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும்  மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ... 
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம் 
ஓம் நமசிவாய சிவ சிவ

உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ