ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது...
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
இன்றைய ராசி பலன்கள் -ஜனவரி -7/2025- செவ்வாய்க்கிழமை
1,மேஷம்
உங்கள் தாய் தந்தையரின் புண்ணியத்தின் அடிப்படையில் இன்று நீங்கள் சில நன்மைகளைப் பெறுவீர்கள் அதன் பொருட்டு நல்லதொரு மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
உங்கள் அன்பிற்குரியவர்களின் அன்பு நிறைந்த செயல்களால் உங்கள் மனம் பூரிப்படையும் அதன் பொருட்டு இனம் புரியாததொரு மன மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
3, மிதுனம்
உங்கள் குலதெய்வத்தின் அருளாலும் உங்களது இஷ்ட தெய்வத்தின் அருளாலும் நீங்கள் எதிர்பார்க்காததொரு நன்மைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
உங்கள் குடும்பத்தினர் உடல் நலனில் அக்கறை தேவை என்பதை உணர்ந்து அவர்கள் நலனுக்காக சில முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்வதன் விளைவாக உங்கள் குடும்பத்தினரும் நீங்களும் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
உங்கள் நம்பிக்கை கூறியவர்கள் உங்கள் மனம் வருந்தும் அளவிற்கு சில செயல்களை செய்வார்கள் இருப்பினும் அவர்கள் நலனுக்காக நீங்கள் செய்யும் சில நல்ல செயல்களை கண்டு அவர்களே வருந்துவார்கள்அதன் பொருட்டு உங்கள் மனம் மேன்மை பெறும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும் அதன் பொருட்டு உங்கள் மனம் இனம் புரியாததொரு மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
7, துலாம்
உங்களது நலனுக்காக உங்களை சார்ந்தவர்கள் சில தியாகங்களை செய்ய வாய்ப்புள்ளது அதன் விளைவாக இனம் புரியாத ஒரு மனநிறைவு பெறும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
உங்கள் அருமை புரியாமல் உங்களை உதாசீனப்படுத்தியவர்களே வருந்தும் அளவிற்குசில நல்ல நிகழ்வுகள் இன்று நிகழும் அதன் பொருட்டு பெருமிதம் பெறும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
உங்களது மன தைரியத்தால் இன்று நீங்கள் செய்யும் ஒரு துணிச்சலான செயலானது உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் நலம் பெற செய்யும் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி பெரும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
உங்களது அன்பிற்குரியவர்களின் நலனுக்காக சில சவால்களை எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்று உங்கள் அன்பிற்குரியவர்களின் நலனை உறுதி செய்வீர்கள் அதன் பொருட்டு பெருமிதம் பெறும்
11, கும்பம்
உங்களைக் குறை கூறுபவர்களுக்கு மத்தியில் இன்று உங்களது நிறைகளை மட்டுமே காண செய்வீர்கள் அதன் பொருட்டு நல்லதொரு பெருமையும் பாராட்டும் பெரும் நன்நாள் இன்நாள்
12, மீனம்
அடியேன் கணித்த 2025 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்களை மேலும் படிக்க read more
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results benefits regularly...
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : பூரம், உத்திரம்
பரிகாரம் :கண் பார்வை அற்றவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான உங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்வது மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்கி தருவது
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய
சுப நட்சத்திரம் : ரேவதி
அடியேன் கணித்த 2025 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்களை மேலும் படிக்க read more
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .
2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.
3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.
இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள் இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும் மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ...
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம்
ஓம் நமசிவாய சிவ சிவ
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ