ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது...
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
இன்றைய ராசி பலன்கள் -ஜனவரி -4/2025- சனிக்கிழமை
1,மேஷம்
தேவை இல்லாத சில குழப்பங்கள் நிலவும் மதியத்திற்கு மேல் ஒரு நல்ல தெளிந்த மனநிலையாக மாறும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
உங்கள் அருமை புரியவரும் காரணத்தால் உங்கள் குடுப்பத்தினர் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும் அதன் விளைவாக உங்களை நீங்களே நேசிப்பீர்கள்
3, மிதுனம்
முன் பின் தெரியாத ஒருவரால் ஒரு நன்மை பெற அதன் பொருட்டு இனம் புரியாதொரு மன நிறைவு பெறும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
உங்களுக்கு வரவிருக்கும் ஒரு துன்பம் உங்கள் துணிச்சலால் விலகும் அதன் விளைவாக நல்லதொரு மன தைரியம் பெறும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
6, கன்னி
7, துலாம்
இன்று நீங்கள் மேற்கொள்ளும் ஒரு செயலானது உங்களை சார்ந்த அனைவருக்கும் நன்மையாக அமையும் அதன் பொருட்டு பெருமை பெறும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
தாய் தந்தையர் சொல்லை தட்டாமல் நடப்பது உங்களுக்கு வரவிருக்கும் துன்பங்களிலிருந்து உங்களை தப்பிக்கச் செய்யும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
ஒரு சவாலை சந்திக்கும் நாள் மற்றும் அதில் வெற்றி காணும் நாள் அதன் விளைவாக ஆனந்தம் பெறும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
புதிய பொருள்களை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது மற்றும் உங்களது வாழ்க்கையில் சிறந்ததொரு முன்னேற்ற பாதையில் அடி எடுத்து வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது அதன் பொருட்டு மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
11, கும்பம்
உங்கள் நட்பு வட்டாரத்தில் உங்களுக்கான மதிப்பு அதிகரிக்கும் அதன் விளைவாக அனைவரிடமும் பாராட்டு பேறும் நன்நாள் இந்நாள்
12, மீனம்
அடியேன் கணித்த 2025 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்களை மேலும் படிக்க read more
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results benefits regularly...
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் :
பூசம்,ஆயில்யம்
பரிகாரம் :ஏழ்மை நிலையில் இருக்கும் உங்களை நல்வழிப்படுத்தும் குருமார்களுக்கு அவர்களுக்குத் தேவையான உங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்து அவர்களின் ஆசியை பெறுவது இன்று பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய
சுப நட்சத்திரம் : சதயம்
அடியேன் கணித்த 2025 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்களை மேலும் படிக்க read more
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .
2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.
3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.
இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள் இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும் மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ...
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம்
ஓம் நமசிவாய சிவ சிவ
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ