ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
வளமான வாழ்வை தரும் குரு பெயர்ச்சி பலன்கள் click here...
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது...
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
இன்றைய ராசி பலன்கள் -நவம்பர் -13/2024- செவ்வாய் கிழமை
1,மேஷம்
உங்களை சார்ந்தவர்களின் நலனுக்காக நீங்கள் செய்யும் ஒரு செயலானது உங்களைச் சார்ந்தவர்களையும், உங்களையும் நலம் பெற செய்யும் அதன் பொருட்டு உங்களது ஆழ்மனமானது இனம் புரியாததொரு மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
2,ரிஷபம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை தலைவலி செரிமான கோளாறு போன்ற உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து எளிமையாக செரிமானம் ஆகும் உணவு வகைகளை உட்கொண்டு தேவையில்லாத வீண் அலைச்சல்களை தவிர்த்து ஓய்வெடுத்தால் நல்லதொரு நலம் பெறும் நன்நாள் இந்நாள்
3,மிதுனம்
நீண்ட நாள் நீங்கள் எதிர்பார்த்து நடக்காத ஒரு செயல் இன்று உங்களது விடா முயற்சியின் விளைவால் நீங்கள் நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் அதன் பொருட்டு நல்லதொரு மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
4,கடகம்
உங்களது பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனால் உங்களை அறியாமலேயே சில புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள் அதன் பொருட்டு இனம் புரியாததொரு மனநிறைவு பெறும் நன்நாள் இந்நாள்
5,சிம்மம்
நீங்கள் எதிர்பார்க்காத வழிகளில் இருந்து சில பணவரவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இன்நாள்
6,கன்னி
சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத சில பயணங்களை மேற்கொள்வீர்கள் அதன் காரணமாக புதுவிதமான அனுபவங்களை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது அதன் பொருட்டு நல்லதொரு மன நிறைவு பெறும் நன்நாள் இந்நாள்
7,துலாம்
உங்களது புத்திக் கூர்மையின் வலிமையால் பிறர் செய்ய தயங்கும் ஒரு செயலில்மிகத் துணிச்சலாக இறங்கி அதில் யாரும் எதிர்பார்க்காதவாறு மாபெரும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. அதன் பொருட்டு அனைவரிடத்திலும் நல்லதொரு பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்
8,விருச்சிகம்
தேவையில்லாத சில செயல்களில் ஈடுபட்டு அதில் தேவையில்லாத சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து மிகுந்த கவனத்துடன் செயல்பட்டால் நல்லதொரு பக்குவம் நிறைந்த நலம் பெறும் நன்நாள் இந்நாள்
9,தனுசு
உங்களது குலதெய்வத்தின் அருளாலும் நீங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாலும் சற்றும் நீங்கள் எதிர்பார்க்காததொரு நல்ல அனுபவத்தையும் நல்லதொரு லாபத்தையும் பெறும் நன்நாள் இந்நாள்
10,மகரம்
புதுவிதமான அணுகுமுறைகளை பயன்படுத்தி உங்களது முன்னேற்ற பாதையை நீங்களே உருவாக்கி அதில் வெற்றி நடை போடும் நாள். அதன் பொருட்டு உங்கள் மனம் மனநிறைவு பெறும் நன்நாள் இந்நாள்
11,கும்பம்
தேவையில்லாத சில மன உளைச்சல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்த்து வீண் வாக்குவாதங்களை தவிர்த்து இன்று நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் அமைதியாக இருந்தால் நல்லதொரு மனநிலை பெற்று அதன் பொருட்டு நலம் பெறும் நன்நாள் இந்நாள்
12,மீனம்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results benefits regularly...
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்சத்திரம் : மகம்
பரிகாரம் : ஆதரவில்லாமல் தவிக்கும் கண் பார்வை அற்றவர்களுக்கு அவர்களுக்கு தேவையான உங்களால் இயன்ற மருத்துவ உபகரணங்களை வாங்கி தருவது மற்றும்அவர்களுக்கு தேவையான உங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்வது இன்றைய நாளை மேலும் சிறப்பாக்கும்.
இன்றைய சுப நட்சத்திரம் : உத்திரட்டாதி
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .
2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.
3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.
இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள் இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும் மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ...
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம்
ஓம் நமசிவாய சிவ சிவ
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ