Click hereto continue today's zodiac results in English
ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் மேலும் படிக்க read more
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது...
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
இன்றைய ராசி பலன்கள் - ஏப்ரல் -5/2024-வெள்ளிக்கிழமை
Click here... to continue today's zodiac results in English
1,மேஷம்
உங்களைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் உங்களது புத்தி கூர்மையை நிரூபித்துக் காட்டுவீர்கள். உங்களை சார்ந்தவர்கள் அனைவரும் உங்களைக் கண்டு வியப்பார்கள் அதன் பொருட்டு அனைவரிடத்திலும் பெருமைமிகு புகழ் பெறும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
நீங்கள் மனதில் நினைத்ததை உங்களது அன்பிற்குரியவர்கள் இன்று செய்து முடிப்பார்கள் அதன் பொருட்டு நல்லதொரு மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
3, மிதுனம்
இனம் புரியாததொரு கவலை இருப்பதற்கு வாய்ப்புள்ளது இருப்பினும் உங்களது குலதெய்வத்தின் அருளாலும் உங்களது இஷ்ட தெய்வத்தின் அருளாலும் நீங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணிய பலனாலும் மதியத்திற்கு மேல் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சியாக மாறும் அதன் விளைவாக நல்லதொரு மகிழ்ச்சி நிறைந்த மனநிறைவு பெறும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை உஷ்ணம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து உடலை குளிர்ச்சி செய்யக்கூடிய உணவு வகைகளை உட்கொண்டு நேரம் கிடைக்கும் பொழுது ஓய்வெடுத்தால் நல்லதொரு நலம் பெறும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
ஆரம்பத்தில் அனைத்தும் சரியாக செல்வது போல் தோன்றும் பின் இறுதியில் உங்கள் நம்பிக்கை கூறியவர்களின் உண்மை முகம் உங்களுக்கு தெரிய வரும் அதன் பொருட்டு சிறிது மன வருத்தம் அடைவதற்கு வாய்ப்பு உள்ளது இருப்பினும் உங்களது இஷ்ட தெய்வத்தின் அருளாலும் உங்களது குலதெய்வத்தின் அருளாலும் சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத நன்மைகளை பெற செய்யும் அதன் பொருட்டு நல்லதொரு பக்குவம் நிறைந்த மன மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
உங்களது புதிய முயற்சிகள் அனைத்தும் இறைவனின் அருளாலும் உங்களது கடுமையான முயற்சியாலும் இன்று உங்களுக்கு கைகூடும் அதன் விளைவாக நல்லதொரு மனநிலையை பெறும் நன்நாள் இந்நாள்
7, துலாம்
உங்கள் அன்புக்குரியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை என்பதை உணர்ந்து உங்களைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் உங்களால் இயன்ற உபகாரங்களை செய்தால் உங்களைச் சார்ந்தவர்களும் நீங்களும் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
உங்களை சார்ந்தவர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் இருக்கும் இன்று உங்களது செயல்கள் அதன் பொருட்டு அனைவரிடத்திலும் பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
சில நாட்களுக்கு முன் தொலைந்து போன ஒரு பொருள் இன்று உங்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது அதன் பொருட்டு இனம் புரியாததொரு மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
நீண்ட நாள் உங்கள் மனதை வருத்தப்படுத்திக் கொண்டிருந்த சில குழப்பங்கள் உங்களது பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாள் இன்று தெளிவிற்கு வரும் அதன் பொருட்டு இனம் புரியாததொரு மன நிறைவை பெறும் நன்நாள் இந்நாள்
11, கும்பம்
உங்கள் அன்பிற்குரியவர்கள் உங்களது அன்பை உதாசீனப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து உங்கள் உறவுகளிடையே சிறு இடைவெளி விட்டு உங்கள் நட்பையும், அன்பையும் தொடர்ந்தால் நல்லதொரு அனுபவம் நிறைந்த நன்நாள் இன்நாள்
12, மீனம்
உங்களால் நன்மையடைந்தவர்களே உங்களைப் பற்றி குறை கூறுவதற்கு வாய்ப்பு உள்ளது.இருப்பினும் உங்களது மேன்மைமிகு குணத்தாலும் நீங்கள் செய்த தர்மத்தின் வலிமையாலும் இனம் புரியாததொரு மன அமைதியை பெறும் நன்நாள் இந்நாள்
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results benefits regularly...
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : மிருகசீரிஷம், திருவாதிரை
பரிகாரம் : அருகிலுள்ள அம்மன் கோவில்களில் நடக்கும் அன்னதானத்திற்கு தேவையான உணவு பொருள்களை வாங்கித் தருவது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
இன்றைய சுப நட்சத்திரம் : அவிட்டம்
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பின் அங்குள்ள முருகப்பெருமானை இரண்டு நெய் தீபம் ஏற்றி மனம் உருகி வழிபடுவது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .
2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.
3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.
இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள் இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும் மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ...
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம்
ஓம் நமசிவாய சிவ சிவ
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
click here...உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி
வாழ்க வளமுடன்