Today zodiac results,இன்றைய ராசி பலன்கள்மார்ச்-28/2024- -வியாழக்கிழமை

Click here... to continue today's zodiac results in English

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here 

தினராசி பலன் பற்றிய விளக்கம் 

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது... 

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...

Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...

இன்றைய ராசி பலன்கள் - மார்ச்-28/2024-வியாழக்கிழமை 

Click here ...to continue today's zodiac results in English

1,மேஷம்,
உங்களது அறிவு கூர்மையால் யாரும் செய்ய முடியாத ஒரு செயலை செய்து  அதில் நல்லதொரு அனுபவத்தையும்,வெற்றியும் பெறும்
நன்நாள் இந்நாள்.

2,ரிஷபம்,
நீண்ட நாள் உங்களிடமிருந்து பிரிந்திருந்த சில உறவுகள் உங்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது .அதன் விளைவாக இனம் புரியாதொரு அனுபவம் பெறும்  நன்நாள் இந்நாள் .

3,மிதுனம்,
உங்களது புகழ் அதிகரிக்கும் வண்ணம் உங்களது செயல்பாடுகள் இருக்கும்.அதன் விளைவாக அனைவரிடத்திலும் பாராட்டு  பெறும் நன்நாள் இந்நாள்.

4,கடகம்,
தேவையில்லாத வீண் செலவுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. என்பதை உணர்ந்து செயல்பட்டால் உங்களது சேமிப்பு கரையாமல் இருக்கும்.அதன் பொருட்டு உங்கள் மனம் நிறைவு பெறும்  நன்நாள் இந்நாள்.

5,சிம்மம்,
வாகனங்களில் செல்கையிலும்,  பிறரிடம் வாக்குக் கொடுப்பதிலும் மிகுந்த கவனமும் நிதானமும் தேவை என்பதை உணர்ந்ததன் விளைவாக நல்லதொரு ஞானம் நிறைந்த அனுபவம்   பெறும் நன்நாள் இந்நாள்.

6,கன்னி,
உங்களது அன்பிற்குரியவர்கள் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சில நற் செயல்களை மேற்கொண்டதன் விளைவாக இனம் புரியாததொரு மனமகிழ்ச்சி பெறும்  நன்நாள் இந்நாள்.

7,துலாம்,
 அனைவரும் செய்ய தயங்கும் ஒரு செயலை சவாலாக ஏற்றுக் கொண்டு அதில் சிறு சிறு தடைகளையும் சந்தித்தபின் புது அணுகுமுறையை கையாண்டு அதில் மாபெரும் வெற்றியை பெறும் நன்நாள் இந்நாள்.

8,விருச்சிகம், 
தேவையில்லாத வீண் பழிகளை சுமப்பதற்கு வாய்ப்பு உள்ளது எனவே இன்று நீங்கள் ஈடுபடும் அனைத்து செயல்களிலும் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நல்லதொரு அனுபவம்  பெறும் நன்நாள் இந்நாள்.

9,தனுசு,
உங்களது முன்கோபத்தால் இன்று சில சவால்களை சந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து கோபத்தை தவிர்த்து  நிதானத்துடன் செயல்பட்டால் நலம்  பெறும்  நன்நாள் இந்நாள்.
10,மகரம், 
உங்களை அறியாமல் நீங்கள் செய்த தவறுகளை சரி செய்வதற்காக சில வாய்ப்புகள் உங்களது பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாக இன்று கிடைக்கும் என்பதை உணர்ந்து உங்களது மேன்மை குணத்தை வெளிப்படுத்தினால் அனைத்து நன்மைகளையும் பெற்ற உணர்வு கிடைக்கும் அதன் பொருட்டு மனம் நிம்மதி  பெறும் நன்நாள் இந்நாள்.
11,கும்பம்,
உங்களது மேன்மை குணத்தை உங்களைச் சார்ந்தவர்கள் உணர்ந்ததன் விளைவாக இன்று நீங்கள் பாராட்டப்படுவீர்கள் அதன் பொருட்டு மகிழ்ச்சி  பெறும்  நன்னாள் இந்நாள்.
12,மீனம்,
உங்களுடன் பயணிப்பவர்களின் உண்மை முகங்களை கண்டறியும் வண்ணம் சில செயல்கள் இன்று நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் விளைவாக சற்றும் நீங்கள் எதிர்பார்க்காததொரு அனுபவத்தையும் ஞானத்தையும்  பெறும் நன்நாள் இந்நாள்.
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில் இணையவும் ...

Join this group to get your today zodiac results  benefits regularly...

ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்சத்திரம் : பூரட்டாதி,உத்திரட்டாதி 
 
பரிகாரம் : உங்கள் நலனில் அக்கறை உள்ள குருமார்கள் மற்றும் ஆசிரியர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் ஆசி பெறுவது மற்றும் அவர்களுக்கு தேவையான உங்களால் இயன்ற உதவிகளை செய்வது  இன்றைய நாளை மேலும்  சிறப்பாக்கும்

இன்றைய சுப நட்சத்திரம் : விசாகம் 

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகிலுள்ள பழமையான சிவா ஆலயங்களுக்கு சென்று அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பின் அங்குள்ள தக்ஷனா மூர்த்தி குரு பகவான் தரிசனம் செய்து சுண்டல் மாலை தந்து அர்ச்சனை செய்து  மனம் உருகி  வழிபடுவது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும் .
 
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.

1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .

2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.

3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.

இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு 
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள்  இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும்  மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ... 
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம் 
ஓம் நமசிவாய சிவ சிவ

உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.


உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ