ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...
இன்றைய ராசி பலன்கள் - பிப்ரவரி -14/2024-புதன் கிழமை
1, மேஷம்
தேவையில்லாத மனக்குழப்பங்களால் சில வருத்தங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது இருப்பினும் உங்களது குலதெய்வத்தின் அருளாலும் உங்களது இஷ்ட தெய்வத்தின் அருளாலும் அனைத்து குழப்பங்களில் இருந்தும் வெளிவந்து நல்லதொரு மனத் தெளிவையும் ஞானத்தையும் பெறும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
நீங்கள் எதிர்பார்க்காத சிறு சிறு விரயங்களை சந்திக்க வாய்ப்புள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நல்லதொரு அனுபவத்தையும் லாபமும் பெறும் நன்நாள் இந்நாள்
3, மிதுனம்
உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும் உங்கள் பொறுப்புகளை உணர்ந்து சிறப்பான ஒரு செயலை செய்து அதன் விளைவாக பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
உங்களுக்கான முன்னேற்ற பாதையில் சில தடைகள் வரும் இருப்பினும் அனைத்து சவால்களையும் கடந்து உங்களுக்கான முன்னேற்ற பாதையில் நீங்கள் இன்று வெற்றி நடை போடும் நாள் அதன் பொருட்டு நீங்கள் பெருமிதம் பெறும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
உங்களைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து நன்மைகளையும் செய்து கொடுத்து அதில் நீங்கள் இன்பம் காணும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
குருட்டுத்தனமான நம்பிக்கையில் யாருக்கும் ஜாமின் கொடுக்கக் கூடாது என்பதை உணர்ந்து இன்று நீங்கள் செயல்பட்டால் உங்களுக்கு வரவிருக்கும் சில துன்பங்களில் இருந்து விலகி நலம் பெறும் நன்நாள் இந்நாள்
7, துலாம்
உங்களை வருத்திக் கொண்டு இன்று நீங்கள் ஆற்றும் ஒரு செயலானது உங்களைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் மிகப்பெரும் நன்மைகளை தரும் அதைக் கண்குளிரக் கண்டு உங்கள் துன்பங்கள் அனைத்தும் விலகும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் என்பதை உணர்ந்து இன்று நீங்கள் செயல்பட்டால் நல்லதொரு நன்மை பெறும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
பல நாட்களாக நீங்கள் நினைத்து நடக்காத ஒரு செயல் இன்று உங்கள் முன்னோர்களின் ஆசியால் வெற்றிகரமாக நடக்கும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
பிறரை சந்தோஷத்தில் ஆழ்த்தி நீங்கள் சந்தோசம் காண்பீர்கள் அதன் விளைவாக மன மகிழ்ச்சியும் புகழும் பெறும் நன்நாள் இந்நாள்
11, கும்பம்
பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் நீங்கள் செய்யும் ஒரு செயல் அதிர்ஷ்டவசமாக இன்று உங்களுக்கு நன்மைகளை தரும் நன்நாள் இந்நாள்
12, மீனம்
இதுவரை நீங்கள் மனதிற்குள் ஒளித்து வைத்திருந்த அன்பை இன்று உங்கள் குடும்பத்தினர் அனைவரும் புரிந்து உணர்வார்கள் அதனால் உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழும் நன்நாள் இந்நாள்
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார
நட்ச்சத்திரங்கள் : மகம்,பூரம்
ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கான உதவிகளை செய்வது பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய சுப
நட்சத்திரம் : ரேவதி
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகிலுள்ள பழமையான பெருமாள் ஆலயங்களுக்கு சென்று அங்குள்ள மகாலட்சுமிக்கு தாமரை தந்து அர்ச்சனை செய்து இரண்டு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மற்றும் கோவில் பசுக்களை பராமரிப்பதற்காக பொருள் உதவி செய்வது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி