ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...
இன்றைய ராசி பலன்கள் - பிப்ரவரி -12/2024-திங்கள் கிழமை
1, மேஷம்
சிறிது சிறிதாக பல நாள் செய்த முயற்சியின் விளைவு இன்று ஒரு மிகப்பெரிய லாபம் வர காரணமாக இருக்கும் நல்லதொரு லாபம் பெறும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
இந்தச் செயலை இவர்களை விட்டால் வேறு யாராலும் செய்ய முடியாது என பெயர் வாங்கி பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்
3, மிதுனம்
இறைவனின் துணையோடு நீங்கள் இன்று துவங்கும் ஒரு செயலில் மாபெரும் வெற்றியையும் நல்லதொரு அனுபவத்தையும் பெறும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
நாம் மிகுந்த கவன குறைச்சலோடு இருக்கிறோம் என்பதை நீங்கள் உணர்வீர்கள் உணர்ந்ததன் விளைவாக உங்களுக்கு வரவிருக்கும் ஒரு துன்பத்திலிருந்து விலகி நன்மை பெறும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
சற்றும் நீங்கள் எதிர்பார்க்காத உங்கள் வாழ்க்கை பயணத்தில் பயணிக்கும் ஒருவரால் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைவதற்கான பாதையில் வெற்றி நடை போடும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை உடல் சூடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது உடலை குளிர்ச்சிப்படுத்தும் உணவுகளை உட்கொண்டு உங்கள் மனதை அமைதியாக வைத்திருந்தால் நல்ல ஆரோக்கியமும் நல்ல மனநிலையையும் பெறும் நன்நாள் இந்நாள்
7, துலாம்
உங்கள் குலதெய்வத்தின் அருளாலும் உங்கள் முயற்சியாலும் இன்று நீங்கள் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெறும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
உங்களுக்கு வரவிருக்கும் ஒரு துன்பத்தை முன்கூட்டியே நீங்கள் உணர்ந்ததன் விளைவாக அதிலிருந்து விலகி நன்மை பெறும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
அனைவரும் செய்யத் தயங்கும் ஒரு நற்செயலை உங்கள் தைரியத்தால் துணிந்து நீங்கள் செய்ததன் விளைவாக அனைவராலும் பாராட்டப்படுவீர்கள் பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்கள் நண்பர்களால் நீங்கள் சுமக்கும் பொறுப்பு சுமை அதிகரிக்கும் அதன் விளைவாக சற்று மன உளைச்சல் ஏற்படும் இருப்பினும் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காகத்தான் என்ற எண்ணம் உங்கள் சுமைகளையும் சுகமாக மாற்றும் நன்நாள் இந்நாள்
11, கும்பம்
சற்றும் எதிர்பார்க்காத உங்களுக்கு தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு சிறு மன வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே எந்த புதிய முயற்சிகளிலும் மற்றும் பிறருக்கு வாக்கு கொடுப்பதிலும் மிகுந்த கவனம் தேவை கவனத்துடனும் நிதானத்துடன் இன்று நீங்கள் செயல்பட்டால் உங்கள் மனம் அமைதி பெறும் நன்நாள் இந்நாள்
12, மீனம்
என்றோ செய்த தவறின் விளைவாக இன்று வேதனைப்படுகிறோம் என்று உங்கள் மனம் வருந்துவதற்கு வாய்ப்புள்ளது இருந்தாலும் இன்று நீங்கள் செய்யும் நன்மையானது இனி வரும் காலங்கள் அனைத்தும் சிறப்பாகும் என்ற நம்பிக்கையில் உங்கள் மனம் நிம்மதி பெறும் நன்நாள் இந்நாள்
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : பூசம்,ஆயில்யம்
பரிகாரம் :
முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தோடு வழி தெரியாமல் தவிக்கும் ஏழ்மை நிலையில் இருக்கும் பட்டதாரிகளுக்கு அவர்களுக்கு தேவையான உங்களால் இயன்ற உதவியை அவர்கள் முன்னேற்ற பாதையை அடைய நீங்கள் செய்வது பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய சுப நட்சத்திரம் : பூரட்டாதி
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று அங்குள்ள குரு பகவானுக்கு ஐந்து நெய் தீபம் ஏற்றி வணங்குவது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி