ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது...
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
இன்றைய ராசி பலன்கள் -ஜனவரி -17/2025- வெள்ளிக்கிழமை
1,மேஷம்,
உங்கள் மீது அன்புள்ள நல்ல உறவுகளுக்கு இன்று நீங்கள் முக்கியத்துவமும் மற்றும் அன்பும் தந்து அதில் மகிழ்ச்சி காணும் நன்நாள் இந்நாள்.
2, ரிஷபம்,
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருத்தல் வேண்டும் என்பதை உணர்ந்தவன் விளைவாக தேவையில்லாத சில அலைச்சல்களை தவிர்த்து அதன் பொருட்டு நலம் பெறும் நன்னாள் இந்நாள்.
3, மிதுனம்,
இன்று உங்கள் குலதெய்வத்தின் அருளால் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்மை வரும் அதனால் உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்.
4, கடகம்,
சில நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு நற்செய்தி மற்றும் உங்கள் மனம் மகிழும் வண்ணம் ஒரு நன்மையும் பெறும் நன்நாள் இந்நாள்.
5, சிம்மம்,
6, கன்னி,
இன்று உங்கள் குடும்பத்தினர் உங்கள் மீது அதிக அக்கறையும் அன்பும் காட்டுவார்கள் அதனால் உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்.
7, துலாம்,
இன்று நீங்கள் நம்பிக்கை வைத்த ஒருவரால் மன வருத்தத்திற்கு உள்ளாவீர்கள் மதியத்திற்குப் பின் சில உண்மைகளை உணர்ந்து நல்லதொரு அனுபவம் பெற்று மனம் அமைதி பெறும் நன்நாள் இந்நாள்.
8, விருச்சிகம்,
ஒரு சிறு விரயத்தை சந்திக்க நேரிடும் மதியத்திற்குப் பின் இழந்த விரயத்தை விட இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் அதனால் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்.
9, தனுசு,
நீங்கள் எதிர்பார்த்த வகையில் லாபம் கிடைக்காமல் சற்றும் எதிர்பார்க்காத வேறு வழியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் அதனால் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்.
10, மகரம்,
உங்கள் சுய முயற்சியால் பிறரால் செய்ய முடியாத ஒரு செயலை நீங்கள் செய்து முடிக்கும் பொருட்டு நீங்கள் சாதனையாளன் என்று நீங்களே உணர்ந்து மனம் நிறைவு பெறும் நன்நாள் இந்நாள்.
11, கும்பம்,
நாளைய நாளை கருத்தில் கொண்டு இன்று நீங்கள் செய்யும் ஒரு நற்செயல் இன்றையும் நாளையும் மிக சிறப்பாக மாற்றும் என்பதை உணர்ந்து உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
12, மீனம்,
அடியேன் கணித்த 2025 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்களை மேலும் படிக்க read more
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results benefits regularly...
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : உத்திராடம், திருவோணம்
உங்கள் நலனில் அக்கறை உள்ள ஆசிரியர்களையும் உங்களை வழிநடத்தும் குருமார்களையும் வணங்குவதும் அவர்களுக்கு தேவையான உங்களால் இயன்ற உதவியை செய்வது பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதும் இன்று உங்களுக்கு பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்.
இன்றைய சுப நட்சத்திரம் :மகம்
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகில் உள்ள பழமை வாய்ந்த முருகன் கோவிலுக்கு சென்று ஆறு சிவப்பு தாமரை வாங்கி கொடுத்து ஆறு நெய் விளக்கு ஏற்றி வழிபடுதல் மற்றும் காவி உடை அணிந்த துறவிகளுக்கு காவி வேஷ்டி, காவி துண்டு வஸ்திர தானம் தருவது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்.
அடியேன் கணித்த 2025 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்களை மேலும் படிக்க read more
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .
2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.
3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.
இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள் இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும் மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ...
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம்
ஓம் நமசிவாய சிவ சிவ
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ