today zodiac results,இன்றைய ராசி பலன்கள் மார்ச்-6/2024-புதன்கிழமை




ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ


தினராசி பலன் பற்றிய விளக்கம் 

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது... 



இன்றைய ராசி பலன்கள் - மார்ச்-6/2024-புதன்கிழமை


1, மேஷம் 
சில வீண் விரயங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது தேவையில்லாத வாக்குறுதிகளை யாருக்கும் தர வேண்டாம் மிகுந்த கவனத்துடனும் நிதானத்துடனும் இன்று நீங்கள் இருந்தால் நிச்சயம் நல்லதொரு அனுபவத்தை பெறும்   நன்நாள் இந்நாள்

2, ரிஷபம் 
உங்களால் முடிக்க முடியாது என்று நீங்களே நினைக்கும் ஒரு செயலை இறைவன் அருளாலும் உங்கள் முயற்சியாலும் சிறப்பாக முடித்து பாராட்டு பெறும்   நன்நாள் இந்நாள்

3, மிதுனம்
புதிய பயணங்களை சந்திக்க நேரிடும் பயணங்களில் நல்ல அனுபவத்தையும் மற்றும் பக்குவத்தையும் பெறும்  நன்நாள் இந்நாள்

4, கடகம்
உங்கள் தைரிய வீரியத்தால்இன்று நீங்கள் ஆற்றும் ஒரு செயல் உங்களுக்கு மாபெரும் வெற்றியைத் தரும் உங்கள் துணிச்சலை அனைவரும் பாராட்டுவார்கள் உங்கள் மனம் பெருமிதம் அடையும்  நன்நாள் இந்நாள் 

5, சிம்மம் 
உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற சில சவால்களை சந்திக்க நேரிடும் இருப்பினும் சவால்களில் வெற்றி  பெறும்  நன்நாள் இந்நாள்

6, கன்னி
இனம் புரியாத பயமும் மனக்குழப்பமும் இன்று அதிகமாக வாய்ப்பு உள்ளது எனவே நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயலாற்றினால் அனைத்தும் நன்மையாக நடக்கும்  நன்நாள் இந்நாள் 

7, துலாம்
நீங்கள் செய்யக்கூடிய அனைத்து செயல்களுக்கும் இன்று உங்களுக்கு பிரதிபலனாக கிடைக்கப் போவது ஞானம் என்பதை மனப்பூர்வமாக உணரும்  நன்நாள் இந்நாள் 

8, விருச்சிகம் 
உங்கள் நம்பிக்கை கூறியவர்களே உங்களை வருத்தம் அடைய செய்ய வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து அனைவரிடத்திலும் விழிப்புணர்வுடனும் பேச்சில் நிதானத்துடனும் இருந்தால் நலம்  பெறும்  நன்நாள் இந்நாள்  

9, தனுசு 
உங்கள் முன்னேற்றத்திற்கான ஆகச்சிறந்த ஒரு நற்செயலை செய்து அதில் மாபெரும் முன்னேற்றத்தையும் வெற்றியையும் காணும்  நன்நாள் இந்நாள் 
10, மகரம்
உங்கள் குடும்பத்தினர் மீது மற்றும் உங்கள் நண்பர்கள் மீது நீங்கள் காட்டும் உண்மையான பரிவு, பாசம் நீங்கள் யார் என்பதை உணர்த்தும் உங்கள் நண்பர் வட்டாரம் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் உங்களை பாராட்டுவார்கள் உங்கள் மனம் பெருமிதம் அடையும் 
நன்நாள் இந்நாள் 
11, கும்பம் 
தேவையில்லாத அலைச்சல்களை தவிர்ப்பது சட்டென்று யாருக்கும் வாக்கு கொடுக்காமல் இருப்பது உங்களை காக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் பல நன்மைகள் பெறும்   நன்நாள் இன்நாள்
12, மீனம் 
நீங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாக இன்று உங்களுக்கு மிக தேவையான ஒரு நற்செய்தி வரும்  நன்நாள் இந்நாள் 


ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : ரோகினி,மிருகசீரிடம் 
 
பரிகாரம் : சாலையோரம் ஆதரவின்றி தவிக்கும் மிகவும் வயதான முதியவர்களுக்கு எளிமையாக செரிமானம் ஆகக்கூடிய உணவு , தண்ணீர் தருவது மற்றும் அவர்களுக்கு தேவையான உங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்வது 
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும் 
இன்றைய சுப நட்சத்திரம் : உத்திராடம் 

உத்திராடம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகில் உள்ள பழமையான சிவாலயங்களுக்கு சென்று அங்குள்ள உற்சவருக்கும் அம்பாளுக்கும் வில்வம் மற்றும் தாமரை வாங்கித் தந்து அர்ச்சனை செய்துமனம் உருகி வழிபடுவது   இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.

1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .

2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.

3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.

இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு 
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள்  இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும்  மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ... 
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம் 
ஓம் நமசிவாய சிவ சிவ

உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.click here

உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ