Click here to continue today's zodiac results in English
ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது...
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...click here ...
Join this group to get your today zodiac results benefits regularly...click here ...
இன்றைய ராசி பலன்கள் - மார்ச்-31/2024-ஞாயிற்றுக்கிழமை
Click here to continue today's zodiac results in English
1,மேஷம்,
தேவையில்லாத அலைச்சல்கள் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்தால் நல்லதொரு அனுபவம் நிறைந்த மன நிறைவை பெறும்
2,ரிஷபம்,
உங்களைச் சார்ந்தவர்களின் நலனுக்காக சில சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது இருப்பினும் உங்களது புத்திக்கூர்மையின் வலிமையால் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு அதில் உங்களைச் சார்ந்தவர்களும் நீங்களும் நலம் பெறும் நன்நாள் இந்நாள் .
3,மிதுனம்,
உங்களைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் உங்களால் இயன்ற சிறு உதவிகளை செய்வதற்கான வாய்ப்புள்ளது அதன் விளைவாக அனைவரிடமும் நல்லதொரு வாழ்த்தும் பாராட்டும் பெறும் நன்நாள் இந்நாள்.
4,கடகம்,
உங்களுடன் வேடமிட்டு பழகும் சிலரின் உண்மை முகம் தெரியவரும் அதன் விளைவாக சிறிது மன வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது இருப்பினும் அதுவும் நன்மைக்கே என்று உணர்ந்ததன் விளைவாக நல்லதொரு அனுபவம் பெறும் நன்நாள் இந்நாள்.
5,சிம்மம்,
இறைவனின் அருளை பரிபூரணமாக உணரும் வண்ணம் சில செயல்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது அதன் விளைவாக ஆன்மீகத்தில் மேன்மை நிலை அடைந்து நல்லதொரு இறை அருள் பெறும் நன்நாள் இந்நாள்.
6,கன்னி,
என்றோ ஒரு நாள் நீங்கள் செய்ததன் விளைவின் காரணமாக இன்று உங்களது மனம் இனம் புரியாததொரு வருத்தம்அடைவதற்கு வாய்ப்பு உள்ளது இருப்பினும் உங்களது பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனால் நல்லதொரு பக்குவம் நிறைந்த அனுபவத்தை பெறும் நன்நாள் இந்நாள்.
7,துலாம்,
உங்களது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உங்கள் புகழ் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது அதன் விளைவாக அனைவரிடத்திலும் பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்.
8,விருச்சிகம்,
உங்கள் மனதிற்கு பிடித்த சில பொருட்களை வாங்குவீர்கள். அதன் காரணமாக நல்லதொரு மன நிறைவையும், மகிழ்ச்சியும் பெறும் நன்நாள் இந்நாள்.
9,தனுசு,
முன்பின் தெரியாதவர்களுக்கு நீங்கள் செய்யும் ஒரு உபகாரம் உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் நலம் பெறச் செய்யும் அதன் காரணமாக நல்லதொரு நன்மையை பெறும் நன்நாள் இந்நாள்.
10,மகரம்,
இன்று நீங்கள் செய்யும் ஒரு செயல் ஆனது சற்றும் நீங்கள் எதிர்பார்க்காததொரு பக்குவத்தையும், நல்லதொரு அனுபவத்தையும் பெறச் செய்யும். அதன் பொருட்டு இனம் புரியாத ஒரு மனதெளிவு பெறும் நன்நாள் இந்நாள்.
11,கும்பம்,
நீண்ட நாள் இருந்த ஒரு மன வருத்தம் உங்களது சில முயற்சியால் இன்று தீருவதற்கான வாய்ப்பு உள்ளது அதன் விளைவாக இனம் புரியாததொரு மனநிம்மதி பெறும் நன்னாள் இந்நாள்.
12,மீனம்,
உங்களுக்கு மிக நெருக்கமானவர்களின் சில செயல்களால் சிறிது மன வருத்தம் அடைவதற்கான வாய்ப்பு உள்ளது.என்பதை உணர்ந்து மிகுந்த பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடித்தால் உங்கள் மனம் வருத்தம் அடைய காரணமானவர்களே தவறு என்று உணர்ந்து உங்களைப் பாராட்டுவார்கள் அதன் பொருட்டு நல்லதொரு பாராட்டு பெறும் நன்நாள் இந்நாள்.
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ...
Join this group to get your today zodiac results benefits regularly...
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்சத்திரம் :அஸ்வினி,பரணி
பரிகாரம் : கோவில்களுக்கு அருகில் வசிக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் தருவது மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வது இன்றைய நாளை மேலும் சிறப்பாக்கும்
இன்றைய
சுப நட்சத்திரம் : கேட்டை
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகிலுள்ள பழமையான பெருமாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பின் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் அவர்களுக்கு துளசி வாங்கி தந்து அர்ச்சனை செய்வது மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கற்கண்டு வாங்கி பிரசாதமாக தருவது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும் .
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .
2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.
3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.
இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள் இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும் மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ...
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம்
ஓம் நமசிவாய சிவ சிவ
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி
வாழ்க வளமுடன்