today zodiac results,இன்றைய ராசி பலன்கள் மார்ச்-26/2024-செவ்வாய் கிழமை


Click here... to continue today's zodiac results in English

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ


தினராசி பலன் பற்றிய விளக்கம் 

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது... 

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...click here ...

Join this group to get your today zodiac results  benefits regularly...click here ...

இன்றைய ராசி பலன்கள் - மார்ச்-26/2024-செவ்வாய் கிழமை 

Click here... to continue today's zodiac results in English

1,மேஷம்,
வாகனங்களில் செல்கையில் கவனம் தேவை வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும் உங்கள்  பேச்சாற்றலால் இன்று பாராட்டுகளை பெறுவீர்கள் அதனால்  மகிழ்ச்சி பெறும்
நன்நாள் இந்நாள்.

2,ரிஷபம்,
பிறர் உங்களை குறை கூறும் நிலை உருவாகும் பின் உங்களது முன் யோசனையும் சமயோசித புத்தியும் உங்களை காக்கும் நன்நாள் இந்நாள்.

3,மிதுனம்,
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, இன்று சற்று சோர்வு இருக்கும் சத்துக்கள் நிறைந்த நல்ல உணவை உண்டு ஓய்வெடுத்தால் நலம் பெறும்  நன்நாள் இந்நாள்.

4,கடகம்,
உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களோடு துணையாக இருப்பவர்கள் மீது நீங்கள் அக்கரை காட்டும் நன்நாள் இந்நாள்.

5,சிம்மம்,
 இன்று நீங்கள் எங்கு பேச வேண்டும் பேச வேண்டாம் என்பதை உணர்ந்து நடந்துகொண்டால் நிம்மதி பெரும் நன்நாள் இந்நாள்.

6,கன்னி,
உங்கள் எதிர்காலத்தை நினைத்து ஒரு நற்ச்செயலை செய்து பல நன்மைகளை பெரும்  நன்நாள் இந்நாள்.

7,துலாம்,
 உங்கள் அன்பிற்குரியவர்களால் உங்களுக்கு, நன்மைகள் நடக்கும்  அதன் விளைவாக மனமார்ந்த மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்.

8,விருச்சிகம், 
தேவைஇல்லாத சில விசயத்தால்,கவலை கொள்வீர்கள் ஆன்மீக சிந்தனையை அதிகரித்தால் ,நிம்மதி பெறும் நன்நாள் இந்நாள்.

9,தனுசு,
சில சந்தர்ப்பவாதிகளால் நீங்கள், மனஉளைச்சலுக்கு ஆளாகும் நாள் இன்று ,இருப்பினும் உங்கள் நல்ல எண்ணங்களால் நன்மைகள் பெரும்  நன்நாள் இந்நாள்.
10,மகரம், 
விரையங்களை சந்திக்க நேரிடும் கவனமாகவும், நிதானமாகவும் செயல்பட்டால் சுபச்செலவாக மாறும், மகிழ்ச்சி காணும்   நன்நாள் இந்நாள்.
11,கும்பம்,
நல்லதை நினைத்து நல்லதை செய்ததால், உங்களுக்கு நல்லதே நடக்கும் ,என்பதை உணரும் வகையில்நீங்கள் எதிர்பாராத திடீர் பல நன்மைகள் நிகழும்  இந்நாள்.
12,மீனம்,
எதிர்பார்க்காத வழியில் இருந்து பணவரவு வரும் நீங்கள் கவனத்துடன் செலவு செய்தால் சிறிதளவு சேமித்து மகிழலாம் நன்நாள் இந்நாள்.
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில் இணையவும் ...

Join this group to get your today zodiac results  benefits regularly...

ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்சத்திரம் : அவிட்டம்,சதயம் 
 
பரிகாரம் :  ஆதரவின்றி ரோட்டோரத்தில் ஆடைகள் கிழிந்த நிலையில் தவிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களது பழைய ஆடைகளையோ அல்லது உங்களால் இயன்றால் புது ஆடைகளை அவர்களுக்கு வாங்கித் தருவது இன்றைய நாளை உங்களுக்கு சிறப்பாக்கும்

இன்றைய 
சுப நட்சத்திரம் : சித்திரை 

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகிலுள்ள பழமையான முருகன் கோவிலுக்கு சென்று ஆறு இளஞ்சிவப்பு தாமரை வாங்கித் தந்து அர்ச்சனை செய்வது மற்றும் மனமுருகி வழிபடுவது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும் .
 
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.

1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .

2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.

3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.

இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு 
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள்  இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும்  மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ... 
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம் 
ஓம் நமசிவாய சிவ சிவ

உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.

உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ