today zodiac results,இன்றைய ராசி பலன்கள் மார்ச்-25/2024- திங்கள் கிழமை

Click here to continue today's zodiac results in English

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ


தினராசி பலன் பற்றிய விளக்கம் 

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும்  தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...

அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது... 

உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில்  இணையவும் ...

Join this group to get your today zodiac results  benefits regularly...click here

இன்றைய ராசி பலன்கள் - மார்ச்-25/2024-திங்கள் கிழமை 

Click here to continue today's zodiac results in English

1,மேஷம்,
இன்று நீங்கள் ஆற்றும் ஒரு செயல் ஆனது பரிபூரணமாக இறைவனின் அருளை நீங்கள் பெற உறுதுணையாக இருக்கும் அதன் பொருட்டு நீங்கள் புண்ணியம்   பெறும்  நன்நாள் இந்நாள்.

2,ரிஷபம்,
தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது மற்றும் இன்று உங்கள் நிலை அறிந்து செலவுகளை குறைப்பது உங்களை நலம் பெற செய்யும் என்பதை உணர்ந்ததன் விளைவாக இன்று உங்கள் மனம் மகிழ்ச்சி  பெறும்  நன்நாள் இந்நாள்.

3,மிதுனம்,
பல நாட்களாக உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்த ஒரு நன்மை இன்று உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது மேலும் திடீர் யோகத்தால் நல்லதொரு லாபம்   பெறும்  நன்நாள் இந்நாள்.

4,கடகம்,
உங்களது முன்னேற்றப் பாதையை நோக்கிய உங்களது பயணத்தில் சற்றும் எதிர்பார்க்காத ஒரு நபரிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் உதவியால் மிகப்பெரிய ஒரு நல்லதொரு ஆதாயத்தை  பெறும்  நன்நாள் இந்நாள்.

5,சிம்மம்,
அனைத்தும் முடிந்து விட்டது என நீங்கள் நினைக்க வாய்ப்புள்ளது இருந்தாலும் உங்களது பூர்வ ஜென்ம புண்ணியத்தின் ஒரு நற்பலனாக இன்று நடக்கவிருக்கும் சில நிகழ்வுகள் உங்களது வாழ்வில் நீங்கள் முன்னேற மிகவும் உறுதுணையாக இருக்கும் அதனால் உங்கள் மனம் மகிழ்ச்சி   பெறும் நன்நாள் இந்நாள்.

6,கன்னி,
வெளியில் சொல்ல முடியாத சில மன வருத்தங்களால் இன்று நீங்கள் சற்று சோர்வாக காணப்படுவீர்கள்  இருந்தாலும் இறைவன் மீதான நம்பிக்கையால் நல்ல மன வலிமையை பெறும்  நன்நாள் இந்நாள்.

7,துலாம்,
உங்களது நெருங்கிய நண்பர்களிடம் மிகுந்த கவனம் தேவை அவர்களால் இன்று உங்கள் மனம் வருத்தம் அடைய வாய்ப்புள்ளது அனைவரிடத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்பதை உணர்ந்து செயலாற்றினால் நல்லதொரு நலம்   பெறும் நன்நாள் இந்நாள்.

8,விருச்சிகம், 
தேவையில்லாத அலைச்சல்களையும் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களையும் தவிர்ப்பது நல்லது வாக்கு கொடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்பட்டால் நல்லதொரு அனுபவம்  பெறும் நன்நாள் இந்நாள்.
Help me: 8056359660. Madurai.
9,தனுசு,
உங்களது குலதெய்வத்தின் துணையினால் உங்களுக்கு வரவிருக்கும் ஒரு துன்பத்திலிருந்து விடுபட்டு நிம்மதி பெருமூச்சு விடும் நாள் அதனால் உங்கள் மனம் அமைதி  பெறும் நன்நாள் இந்நாள்.
10,மகரம்,
நீண்ட நாள் தள்ளிச்சென்ற  நீங்கள் பெறவேண்டிய ஒரு நன்மையை உங்களது முயற்சியால் இன்று பெறுவீர்கள் அதனால் உங்கள் மனம் நிறைவு நிலை  பெறும் நன்நாள் இந்நாள்.
11,கும்பம்,
உங்களோடு இறைவன் துணை நிற்பதை உணர்வுபூர்வமாக இன்று நீங்கள் உணர்வீர்கள் அதன் பொருட்டு உங்கள் மனம் அமைதி  பெறும் நன்நாள் இந்நாள்.
12,மீனம்  
தேவையில்லாத அலைச்சல்களை  தவிர்ப்பதும் வாகனங்களில் செல்லும்பொழுது கவனமாக இருப்பதும்  இன்று உங்களுக்கு நல்லதொரு நன்மையை தரும் நன்நாள் இந்நாள்.
உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு  இந்த குழுவில் இணையவும் ...

Join this group to get your today zodiac results  benefits regularly...click here

ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : திருவோணம்,அவிட்டம் 
 
பரிகாரம் : 
வறுமை நிலையில் உள்ள நோயாளிகளுக்கு அவர்களுக்குத் தேவையான மற்றும் உங்களால் இயன்ற பொருள் உதவியை செய்வது பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்.

இன்றைய 
சுப நட்சத்திரம் : அஸ்தம்   
 
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்வது மற்றும் பெருமாள் கோவிலில் நடக்கும் அன்னதானத்திற்கு உங்களால் இயன்ற உதவியை செய்வது  இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்.
 
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும்  என்பதை பற்றிய விளக்கம்.

1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .

2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.

3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.

இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு 
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள்  இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும்  மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ... 
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம் 
ஓம் நமசிவாய சிவ சிவ

உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.

உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ