ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது...
இன்றைய ராசி பலன்கள் - மார்ச்-18/2024-திங்கள் கிழமை.
1, மேஷம்
உங்கள் அன்பிற்குரியவர்கள் இன்று உங்கள் மீதும் காட்டும் அக்கறையை கண்டு மனம் பூரிப்பீர்கள் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்.
2, ரிஷபம்
உங்களது குல தெய்வத்தின் அருளாலும்உங்களது நல்ல எண்ணத்தாலும் இன்று உங்களுக்கு மிகப்பெரிய நன்மை ஒன்று விளையும் அதன் பொருட்டு உங்கள் மனம் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்.
3, மிதுனம்
சற்று உடல் சோர்வும் மனச் சோர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ளது இருப்பினும் உங்களது தனி திறமையால் நல்லதொரு அனுபவத்தையும் வெற்றியையும் பெறும் நன்நாள் இந்நாள்.
4, கடகம்
உங்களது முன்கோபத்தால் உங்களுக்கு மிக நெருக்கமானவர்களின் மனநிலையை சற்று வருத்தத்திற்கு உள்ளாக்க வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து நிதானத்தை கடைபிடித்தால் உங்களைச் சார்ந்தவர்களும் நீங்களும் நலம் பெறும் நன்நாள் இந்நாள்.
5, சிம்மம்
உங்களுக்கு மிக நெருக்கமானவர்களின் அன்பினை உணர்ந்ததன் விளைவாக உங்களுடன் பயணிக்கும் உறவுகளுக்கு மத்தியில் நீங்கள் காட்டும் அன்பானது அதிகரிக்கும் அதன் பொருட்டு நல்லதொரு அன்பு நிறைந்த அனுபவம் பெறும் நன்னாள் இந்நாள்.
6, கன்னி
தர்மம் தலைகாக்கும் என்பதை நீங்கள் உணரும் வகையில் என்றோ நீங்கள் செய்த தர்மத்தின் விளைவாக இன்று மிகப்பெரிய நன்மை பெறும் நன்நாள் இந்நாள்.
7, துலாம்
உங்களது பிடிவாத குணத்தால் உங்களுக்கு வரவிருக்கும் சில நன்மைகளை இழக்க வாய்ப்புள்ளது அனைவரிடத்திலும் அன்பாகவும் நிதானத்துடனும் நடந்து கொண்டால் நீங்கள் எதிர்பார்த்த ஒரு பரிசு பெறும் நன்நாள் இந்நாள்.
8, விருச்சிகம்
உங்களுக்கு மிக தேவையான பொருள் தொலைந்து போக வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து விழிப்புணர்வுடன் இருந்தால் நல்லதொரு பரிசு பெறும் நன்நாள் இந்நாள்.
9, தனுசு
உங்களது சில செயல்பாடுகளால் உங்களைச் சார்ந்தவர்களுக்கு சிறு மன வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் மிகுந்த கவனத்துடனும் நிதானத்துடனும் செய்தால் அனைவரும் நலம் பெறும் நன்நாள் இந்நாள்.
10, மகரம்
உங்கள் குடும்ப நலனில் அக்கறை தேவை என்பதை உணர்ந்து செயல்படுவது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நலம் சேர்க்கும் நன்நாள் இந்நாள்.
11, கும்பம்
உங்களைச் சார்ந்தவர்கள் இன்று உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக நீங்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும் இருப்பினும் இறைவன் அருளால் அனைத்து சவால்களிலும் வெற்றி காணும் நன்நாள் இந்நாள்.
12, மீனம்
உங்களது குலதெய்வத்தின் அருளாலும் உங்களது இஷ்ட தெய்வத்தின் அருளாலும் இன்று ஒரு மிகப்பெரிய ஆதாயமும் லாபமும் பெறும் நன்நாள் இந்நாள்.
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : சுவாதி,விசாகம்
பரிகாரம் :
அருகிலுள்ள ஜீவசமாதி ஆலயங்களில் நடக்கும் அன்னதானத்திற்கு உங்களால் இயன்ற மற்றும் அவர்களுக்கு தேவையான பொருள் உதவியை
அருகிலுள்ள ஜீவசமாதி ஆலயங்களில் நடக்கும் அன்னதானத்திற்கு உங்களால் இயன்ற மற்றும் அவர்களுக்கு தேவையான பொருள் உதவியை
செய்வது பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய
சுப நட்சத்திரம் : திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகில் உள்ள பழமையான சிவா ஆலயங்களுக்கு சென்று அங்குள்ள தக்ஷனா மூர்த்திக்கு இரண்டு நெய் விளக்கு ஏற்றி வழிபடுவது மற்றும் உங்களது குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டால் இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்.
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .
2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.
3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.
இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள் இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும் மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ...
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம்
ஓம் நமசிவாய சிவ சிவ
உங்களது ராசி நட்சத்திரத்தையும் மற்றும் ஜாதக விவரத்தையும் தெரிய வேண்டுமானால் இந்தத் தளத்தை பயன்படுத்தலாம்.click here
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ