ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத்
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
தினராசி பலன் பற்றிய விளக்கம்
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் தினமும் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை பயணத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வெற்றியாகவும் கடக்க பெருமளவு நமக்கு உதவியாக இருக்கும் வழிகாட்டி தான் இந்த தின ராசிபலன் அடியேன் பதிவிடும் ராசி பலன்களை படித்து நீங்கள் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்னாள் இந்நாள் என்று நீங்களே உங்கள் மனதை உறுதி செய்ய படிப்பது உங்கள் மன வலிமையை அதிகரிக்கும் மேலும் இன்றைய உங்களது வாழ்க்கை பயணத்தை எவ்வளவு சவால்களாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை கடக்க உதவியாக இருக்கும் நன்னாள் இந்நாள் என்பதை மிகவும் அழுத்தமாக உங்கள் ஆழ் மனதிற்கு கேட்கும் அளவிற்கு வாசியுங்கள் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நன்னாளாகவே அமைய இறைவனை வேண்டுகிறேன்...
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவிகிதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம் இந்த ராசி பலனின் நிறைவுப் பகுதியில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது...
இன்றைய ராசி பலன்கள் - மார்ச்-16/2024-சனிக்கிழமை
1, மேஷம்
இனம் புரியாத ஒரு பயமும் வருத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து ஆன்மீக சிந்தனையை அதிகரித்துக் கொண்டால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
2, ரிஷபம்
உங்கள் அன்பிற்குரியவர்களுக்காக நீங்கள் செய்யும் ஒரு செயல் அவர்களை மட்டும் அல்லாமல் உங்களையும் மகிழ்ச்சி அடைய செய்யும் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
3, மிதுனம்
நீங்கள் ஆற்றும் செயல்களில் உங்களை அறியாமலே புண்ணியங்ள் அதிகரிக்கும் அதன் விளைவாக இனம் புரியாதொரு மன அமைதியும் மன மகிழ்ச்சியும் பெரும் நன்நாள் இந்நாள்
4, கடகம்
உங்கள் மனம் நோகும்படி செய்த சிலர் அவர்கள் செய்தது தவறு என்று உணர்வார்கள் அதன் பொருட்டு உங்கள் புகழ் அதிகரிக்கும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
உங்கள் குடும்பத்தினரால் சற்று உங்கள் மனம் வருத்தம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
7, துலாம்
உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு செயலை செய்ததன் விளைவாக மிகப்பெரிய புகழையும் லாபத்தையும் பெறும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
உங்களின் மிகுந்த நம்பிக்கைக்கு உள்ளானவர்களே இன்று உங்களை வருத்தம் அடைய செய்ய வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடித்தால் மனம் அமைதி பெறும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
என்றோ ஒரு நாள் உங்களை அறியாமல் செய்த சிறு தவறின் விளைவாக இன்று உங்கள் மனம் நோகும்படி சிலர் நடந்து கொள்வார்கள் என்பதை உணர்ந்து ஆன்மீக சிந்தனையை வளர்த்துக் கொண்டால் மனம் அமைதி பெறும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
முன்பின் தெரியாத ஒரு நபரால் இன்று சில நன்மைகளை பெறுவீர்கள் அதன் பொருட்டு இனம் புரியாதொரு மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்
11, கும்பம்
இன்று நீங்கள் செய்யும் ஒரு செயலில் உங்களை அறியாமலே சிறு தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து கவனத்துடன் அனைத்து செயல்களையும் செய்தால் நலம் பெறும் நன்நாள் இந்நாள்
12, மீனம்
உங்களைக் குறை கூறுபவர்களுக்கு இன்று உங்களது அருமை புரிய வரும் அதன் பொருட்டு உங்கள் மதிப்பு கூடும் நன்நாள் இந்நாள்
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் :
அஸ்தம்,சித்திரை
வறுமை நிலையில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு படிப்பிற்கான உங்களால் இயன்ற மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது
பலவிதமான நன்மைகளை உங்களுக்கு தரும்
இன்றைய சுப நட்சத்திரம் : ரோகிணி
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள அருகிலுள்ள அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று உங்களால் இயன்றால் ஏழு தோப்புக்கரணம் போட்டு அருகம்புல் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்து மனம் உருகி வழிபடுவது இன்றைய நாளை மேலும் உங்களுக்கு சிறப்பாக்கும்
அடியேன் கணிக்கும் தின ராசிபலன் எத்தனை சதவீதம் துல்லியமாக இருக்கும் என்பதை பற்றிய விளக்கம்.
1,அன்றாட கோச்சார கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் தின ராசிபலன் - 33%சதவிகிதம் துள்ளியமாக இருக்க வாய்ப்புள்ளது .
2,உங்களது அன்றாட வாழ்க்கை முறை, உங்களைச் சார்ந்தவர்கள்,மற்றும் நீங்கள் வசிக்கும் சூழல், சூழ்நிலை - 33% சதவிகிதம் செயல்படும்.
3,இறைவன் மீதான உங்களது அசைக்க முடியாத முழு நம்பிக்கையும் உங்களது நேர்மறையான எண்ணங்களும் - 33%சதவிகிதம் செயல்படும்.
இந்த மூன்று நிலைகளையும் இணைத்தால் நமக்கு கிடைப்பது 99%சதவிகிதம் மட்டுமே.
மீதமுள்ள அந்த 1%ஒருசதவிகிதம் உங்களது சஞ்சிதகர்மா, ப்ராப்த்த கர்மா, ஆகாமியகர்மா.
நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இயங்கும் உங்களை இயக்கும்.
இன்று நீங்கள் செய்யும் புண்ணியமே உங்களது பிராப்தகர்ம வினையிலிருந்து உங்களை காக்கும்.
அதன் பொருட்டு
உங்கள் வாழ்க்கையில் 99%சதவிகிதம் பிரச்சனைகள், துன்பங்கள் இருந்தாலும்.நீங்கள் செய்யும் புண்ணியத்தின் வலிமை அந்த ஒரு சதவீதத்தை இயக்கி உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவும், வளமானதாகவும் மாற்றும். என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும், கருணை உணர்வுடனும், நன்றி உணர்வுடனும் வாழப்பழகுவோம் ...
தர்மமே கருமத்தை கரைக்கும் ...
இதுவே அடியேனின் தாழ்மையான கருத்து...
சர்வமும் சிவார்ப்பணம்
ஓம் நமசிவாய சிவ சிவ
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய சிவ சிவ