இன்றைய ராசி பலன்கள் ஜனவரி 3-2024

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி  ப்ரசோதயாத் 

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்


குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி-3/2024 புதன்கிழமை  

1, மேஷம் 
 உங்களுக்கு வரவிருக்கும் ஒரு நன்மையை உங்கள் குலதெய்வத்தின் அருளால் பெரும்  நன்நாள் இந்நாள்

2, ரிஷபம் 
உங்களுக்கு தேவையான சில  ஆடம்பர பொருள்களை  இன்று நீங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது அதனால் மகிழ்ச்சி பெறும் நன்நாள் இந்நாள்

3, மிதுனம்
உங்கள் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களிடம் மிக கவனமாக இருக்க வேண்டும் அனைவரிடத்திலும் கவனமாக இருந்தால் இன்று நல்லதொரு அனுபவம் பெறும்    நன்நாள் இந்நாள்

4, கடகம்
இன்று யாரிடமும் நீங்கள் வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள் கொடுத்தால் நிறைவேற்றுவது மிகக் கடினம் இருப்பினும் சில சவால்களை சந்தித்து அதில் வெற்றி பெறும்   நன்நாள் இந்நாள் 

5, சிம்மம்
மன குழப்பம் அதிகரிக்கும் மதியத்திற்குப் பின் மனக்குழப்பத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்து அதில் மகிழ்ச்சி அடையும்    நன்நாள் இந்நாள்

6, கன்னி
சிறு சிறு சுப விரயங்களை சந்திக்க நேரிடும் இருந்தாலும் அவை அனைத்தும் சுபமாகவே இருப்பதால் அதில் மகிழ்ச்சி பெரும்   நன்நாள் இந்நாள் 

7, துலாம்
நீங்கள் எதிர்பாராத பல வகைகளில் இருந்து லாபம் பெறும்     நன்நாள் இந்நாள் 

8, விருச்சிகம்
பணிபுரியும் இடத்திலும் நெருங்கிய நண்பர்கள்  வட்டாரத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நீங்களே உணர்ந்து நல்லதொரு அனுபவத்தை பெறும்  நன்நாள் இந்நாள்  

9, தனுசு 
உங்களுக்கு வரவிருக்கும் ஒரு நல்ல லாபத்தை உங்களுக்கு வேண்டியவர்களே தடுப்பதை உணர்ந்து அவர்களிடமிருந்து விலகி நன்மை பெறும்   நன்நாள் இந்நாள் 

10, மகரம்
நீங்கள் மிகவும் எதிர்பார்த்த ஒன்று மிகத் தவறானது என்று உணர்ந்து உங்கள் எதிர்கால நன்மைக்காக ஒரு நற்செயலை செய்து அதில் மன நிம்மதி பெரும்    நன்நாள் இந்நாள் 

11, கும்பம் 
உங்கள் நெருங்கிய நண்பர்களால் ஒரு மிகப்பெரிய நன்மையையும் புகழையும் பெரும்   நன்நாள் இந்நாள்

 12, மீனம் 
மதியம் வரை சிறு சிறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும் பின் சிறிது சிறிதாக உடல் உபாதைகள் அனைத்தும் விலகி நிம்மதி பெறும்   நன்நாள் இந்நாள் 


ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : அவிட்டம்,சதயம் 
 

பரிகாரம் : உங்கள் சகோதரிகளுக்கு சகோதரர்களுக்கு உங்களால் இயன்ற பரிசு பொருட்களை வாங்கித் தருவது மற்றும் எறும்புகளுக்கு உணவளிப்பது உங்களுக்கு மிகவும் நன்மைகளைத் தரும் 

 உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்